உளுத்தம் பருப்பில் துவையல் செய்வது குறித்து இங்கு பார்ப்போம்.
தேவையான பொருட்கள்
கறுப்பு உளுத்தம் பருப்பு – 1 கப்
காய்ந்த மிளகாய் – 5
பெருங்காயம் – 1 துண்டு
புளி, உப்பு – தேவைக்கு ஏற்ப
எண்ணெய்- தேவைக்கேற்ப
கடுகு, கறிவேப்பிலை – தேவைக்கேற்ப
செய்முறை
முதலில் கடாயில் சிறிது எண்ணெய் விட்டு காய்ந்த மிளகாய், பெருங்காயம் வறுக்கவும். உளுத்தம் பருப்பை வாசனை வரும் வரை வறுத்து எடுத்து, உப்பு, புளி, பெருங்காயம், மிளகாய் சேர்த்து மிக்ஸியில் போட்டு அரைக்கவும். இதன்பின் கடுகு, கறிவேப்பிலை தாளித்து சேர்க்கவும்.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“