Ulundhu sadam recipe, Ulundhu sadam making tamil video: உளுந்து நாம் தவிர்க்கக் கூடாத ஒரு உணவுப் பொருள். உடலை வலுப்படுத்தும் தன்மை உளுந்துக்கு உண்டு. எனவே சிறியவர்கள் முதல் பெரியவர்கள் வரை அனைவரும் உளுந்தை உணவின் ஒரு அங்கமாக எடுத்துக் கொள்ள வேண்டும்.
Advertisment
திருநெல்வேலி, நாகர்கோவில் பகுதியில் இதைப் புரிந்துகொண்டு வீடுகளில் உளுந்து சோறு தயார் செய்வது உண்டு. உழுந்து சோறு தயார் செய்வது எப்படி? என இங்குக் காணலாம்.
Ulundhu sadam making tamil video: உளுந்து சோறு
Advertisment
Advertisements
உளுந்து சோறு செய்யத் தேவையான பொருட்கள்: அரிசி – 2 கப், தொலி உளுந்து – 1 கப், துருவிய தேங்காய் – 1/2 கப், பூண்டு -15 பற்கள், உப்பு – தேவையான அளவு, வெந்தயம் – 1 டீ ஸ்பூன், சீரகம் – 1/2 ஸ்பூன்.
உளுந்து சோறு செய்முறை: ஒரு வாணலியில் சிறிதளவு எண்ணெய் ஊற்றி வெந்தயத்தை பொன்னிறமாக வறுக்கவும். அதில் சீரகத்தையும் சேர்த்து நன்றாக வறுத்து இதனை தனியாக எடுத்து வைத்துக்கொள்ளவும்.
பின்னர் வாணலியில் தொலி உளுந்தம் பருப்பினை கொட்டி அதையும் நன்றாக வறுக்கவேண்டும். ஒரு குக்கரில் கழுவிய அரிசி எடுத்துக் கொண்டு, அதனுடன் நாம் வறுத்து வைத்துள்ள உளுந்தம் பருப்பு, பூண்டு, துருவிய தேங்காய், வெந்தயம், சீரகம் சேர்க்க வேண்டும். தேவையான அளவு உப்பும் போட்டு தண்ணீர் ஊற்றி 4 விசில் வரை வேக விடவும்.
குக்கரில் 4 விசில் முடிந்ததும் குக்கரை திறந்தால் சுவையான உளுந்து சாதம் தயார். தேங்காய் துவையல், எள்ளுத் துவையல், தேங்காய் சட்னி, சாம்பார் உள்ளிட்டவைகளை உளுந்து சாதத்திற்கு சைட் டிஷ்களாக பயன்படுத்தலாம். காலை, மாலை, இரவு என எந்த வேளையும் சாப்பிட ஏற்ற உணவு இது என்பது கூடுதல் சிறப்பு.
"தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற t.me/ietamil"