சவுதியில் உம்ரா வழிபாடு: இந்த ஆண்டு 10 லட்சம் பேருக்கு அனுமதி
இந்தியாவிலிருந்து 2023ஆம் ஆண்டு ஹஜ் மற்றும் உம்ரா இறை வழிபாடு பயணத்திற்காக கடந்த ஆண்டு டிசம்பர் மாதம் விண்ணப்பங்கள் பெறப்பட்டு இந்த ஆண்டு ஜனவரி மாதம் பயணம் மேற்கொள்ள விசா அனுமதி வழங்கப்பட்டது.
இந்தியாவிலிருந்து 2023ஆம் ஆண்டு ஹஜ் மற்றும் உம்ரா இறை வழிபாடு பயணத்திற்காக கடந்த ஆண்டு டிசம்பர் மாதம் விண்ணப்பங்கள் பெறப்பட்டு இந்த ஆண்டு ஜனவரி மாதம் பயணம் மேற்கொள்ள விசா அனுமதி வழங்கப்பட்டது.
ஹஜ் புனிதப் பயணம்.. ஆன்லைன் விண்ணப்ப தேதி நீட்டிப்பு
2023ஆம் ஆண்டில் 10 லட்சம் பேர் இஸ்லாமியர்களின் புனித ஸ்தலமான சவுதியில் அமைந்துள்ள மெக்காவிற்கு உம்ரா வழிபாடு பயணம் மேற்கொள்ள சவுதி அரேபிய அரசு அனுமதி அளித்துள்ளது. இதுதொடர்பாக அந்நாட்டின் ஹஜ் மற்றும் உம்ரா அமைச்சகம் வெளியிட்டுள்ள அறிவிப்பில், “உள்நாடு மற்றும் வெளிநாட்டைச் சேர்ந்த 10 லட்சம் பேருக்கு இந்தாண்டு உம்ரா புனித வழிபாடு பயணம் மேற்கொள்ள அனுமதி வழங்கப்படும்.
Advertisment
வருகிற ரம்ஜான் மாதத்தில் ஹஜ் வழிபாடு பயணத்தில் 20 லட்சம் பேருக்கு அனுமதி வழங்க உள்ளோம். மேலும், எந்த ஒரு வயது வரம்பும் இல்லாமல் பிறந்த குழந்தையிலிருந்து வயதானவர்கள் முதல் மெக்காவிற்கு உம்ரா வழிபாடு செய்ய வசதியினை இந்த ஆண்டு வழங்கி உள்ளோம்.
உம்ரா வழிபாடு
இஸ்லாமியர்களின் ஐந்து கடமைகளில் ஒன்றான தங்களின் வாழ்நாளில் ஒரு முறையேனும் உம்ரா மற்றும் ஹஜ் பயணம் மேற்கொள்வது என்பது இஸ்லாமியர்களின் இறை மார்க்க நம்பிக்கையாகும். இந்தியாவிலிருந்து 2023ஆம் ஆண்டு ஹஜ் மற்றும் உம்ரா இறை வழிபாடு பயணத்திற்காக கடந்த ஆண்டு டிசம்பர் மாதம் விண்ணப்பங்கள் பெறப்பட்டு இந்த ஆண்டு ஜனவரி மாதம் பயணம் மேற்கொள்ள விசா அனுமதி வழங்கப்பட்டது.
Advertisment
Advertisements
அதில் சவுதி அரேபியா: 2023"ஆம் ஆண்டுக்கான புனித பயணம் மேற்கொள்ள 10 லட்சம் பேருக்கு அனுமதி அளித்துள்ளதாக சவுதி அரேபிய அரசு தகவல் தெரிவித்துள்ளது. பொதுவாக ஆண்டுதோறும் சுமார் 30 லட்சம் பயணிகளாவது உம்ரா மட்டும் ஹஜ் இறை வழிபாட்டிற்காக பயணம் மேற்கொள்ள மெக்கா செல்வது வழக்கம்.
குறிப்பாக கொரோனா பெருந்தொற்று காரணமாக மூன்று ஆண்டுகளாக ஹஜ் மற்றும் உம்ரா வழிபாடு செய்யும் பயணிகளுக்கு சவுதி அரசு கட்டுப்பாடுகளை விதித்திருந்தது. 2020ஆம் ஆண்டு 1000 பேருக்கு மட்டுமே அனுமதி வழங்கியது. கடந்த ஆண்டு 60 ஆயிரம் பயணிகளுக்கு மட்டுமே ஹஜ் பயணம் மேற்கொள்ள அனுமதி கொடுக்கப்பட்டு இருந்தது.
ஆனால் இந்த ஆண்டில் எந்த ஒரு கட்டுப்பாடுகள் இல்லாமல் தளர்வுகள் அகற்றப்பட்டுள்ளன. குறிப்பாக இந்த முறை சவுதி அரசானது மெக்கா பள்ளிவாசல் வழிபாட்டுத்தலத்தில் இருந்து சுமார் 30 கிலோமீட்டர் தூரத்திற்கு 500 இலவச பேருந்துகள் அங்கிருக்கும் அனைத்து விதமான மக்கள் அனைவரும் பயணிக்கும் வகையில் பயண வசதியை ஏற்படுத்தி கொடுத்துள்ளது.
செய்தியாளர் பி. ரஹ்மான்
தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil/