கருமையான தோல் நிறம் உள்ளவர்கள், அவர்களின் தோலில்’ மெலனின் அல்லது மெலனோசைட்டுகளின் எண்ணிக்கை அதிகரிப்பதால், அக்குள் கருமையாக இருப்பதற்கான வாய்ப்புகள் அதிகம். சில டியோடரண்டுகள் சருமத்தை எரிச்சலடையச் செய்யலாம், மேலும் சருமம் கருமையாவதற்கும் வழிவகுக்கும்.
ஷேவிங், பிளக்கிங் மற்றும் வாக்சிங் போன்ற காரணங்களால் கூட அக்குளில் கருமை வரலாம். இதனால் ஸ்லீவ்லெஸ் உடை அணிய சிலருக்கு அசௌகர்யமாக இருக்கலாம்.
வீட்டிலேயே, எந்தவித கெமிக்கலும் இல்லாமல் அக்குள் கருமையை எவ்வாறு நீக்குவது?
எலுமிச்சையை, அக்குள் கருமையை நீக்க சிறந்த தீர்வாக பலரும் பரிந்துரைக்கின்றனர். இது பாக்டீரியா மற்றும் துர்நாற்றத்தை அழிக்கிறது.
எப்படி பயன்படுத்துவது?
வாரத்திற்கு மூன்று முறை வரை
கொஞ்சம் தேய்த்து, 10 நிமிடங்களுக்குப் பிறகு, உங்கள் அக்குள்களை குளிர்ந்த நீரில் கழுவி, உலர்த்தி, மாய்ஸ்சரைசரைப் பயன்படுத்துங்கள்.
எலுமிச்சையின் அமிலத்தன்மை அக்குள் கருமை பகுதியை ஒளிரச் செய்து, தோலின் மேற்பரப்பில் இருந்து இறந்த செல்களை நீக்கி, தோலை எக்ஸ்ஃபாலியேட் செய்யும்.
இது உண்மையில் வேலை செய்கிறதா?
எலுமிச்சை சாறு சிட்ரிக் அமிலத்தால் ஆனது, இது AHA அல்லது ஆல்பா ஹைட்ராக்ஸி அமிலம். சருமத்தில் AHA நன்மைகள் இருந்தாலும், எலுமிச்சை சாற்றை நேரடியாக சருமத்தில் பயன்படுத்தக் கூடாது என்று தோல் மருத்துவர் டாக்டர் ஜெய்ஸ்ரீ ஷரத் விளக்கினார்.
எலுமிச்சை சாறு அதிக அமிலத்தன்மை கொண்டது, இந்த அதிக அமிலத்தன்மை உங்கள் சருமத்தின் இயற்கையான pH ஐ மாற்றி எரிச்சல், தோல் உரிவது, வறண்டு போவது, சிவத்தல் மற்றும் நீரிழப்புக்கு வழிவகுக்கும்.
எலுமிச்சம் பழச்சாற்றைப் பயன்படுத்தும்போது தோலில் ஏற்படும் கடுமையான எரிச்சல் கொப்புளங்கள், ஹைப்பர் பிக்மென்டேஷன் மற்றும் நிரந்தர வடுவை ஏற்படுத்தலாம்.
எனவே, எலுமிச்சை சாற்றை குறிப்பாக அக்குள்களில் தடவுவதைத் தவிர்ப்பது நல்லது, என்று டாக்டர் ஜெய்ஸ்ரீ கூறினார்.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“