scorecardresearch

வெவ்வேறு அளவுகளில் மார்பகங்கள்.. மருத்துவர் என்ன சொல்கிறார்?

ஹார்மோன் மாற்றங்கள், பருவமடைதல் மற்றும் விபத்து உள்ளிட்ட பல்வேறு காரணிகள், மார்பகத்தின் அளவை பாதிக்கலாம்

Breasts
What a doctor says about having different sizes of breasts

மார்பக அளவு’ நபருக்கு நபர் மாறுபடும். ஆனால் உங்கள் இரு மார்பகங்கள் ஒன்றுக்கொன்று அளவு மாறுபடும் என்பது உங்களுக்குத் தெரியுமா? நிபுணர்கள் இதை ‘சாதாரணமானது’ என்று கூறினாலும், மார்பக அளவுகளில் திடீர் மாற்றம் ஏற்பட்டால் கவனமாக இருக்க வேண்டும்.

dr_cuterus என்று பிரபலமாக அறியப்படும் மருத்துவர் தனயா, சமீபத்தில் இன்ஸ்டாகிராமில் சமச்சீரற்ற மார்பக அளவு இருப்பது பற்றி பகிர்ந்து கொண்டார்.

மார்பகங்களில் ஒன்று மற்றொன்றை விட பெரியதாக இருப்பது முற்றிலும் இயல்பானது. பொதுவாக, பெரும்பாலானவர்களுக்கு, இது இடது மார்பகமாகும், ஆனால் உங்கள் வலது மார்பகம், இடது மார்பகத்தை விட பெரியதாக இருந்தால், அதுவும் சாதாரணமானது தான், ”என்று அவர் வீடியோவில் கூறினார்.

வித்தியாசம் ஒரு இன்ஞ் அளவுக்கு பெரியதாக இருக்கலாம், ஆனால் மார்பகங்களின் அளவு திடீரென மாறினால், ஒரு மருத்துவரை அணுக வேண்டும் என்று அவர் எச்சரித்தார்.

நொய்டா ஃபோர்டிஸ் மருத்துவமனையின் மூத்த மகப்பேறு மருத்துவர் நேஹா குப்தா இதனை ஒப்புக்கொண்டார், “ஹார்மோன் மாற்றங்கள், பருவமடைதல் மற்றும் விபத்து உள்ளிட்ட பல்வேறு காரணிகள், மார்பகத்தின் அளவை பாதிக்கலாம்.”

ஆனால், உங்கள் மார்பகங்களில் – அளவு, அடர்த்தி அல்லது வடிவத்தில் – முன்பு இல்லாத ஒழுங்கற்ற மாற்றங்களை நீங்கள் கவனித்தால், அல்லது முலைக்காம்பிலிருந்து இரத்த வெளியேற்றம் அல்லது மார்பகத்தின் மேல் தோலில் வலி மற்றும் சுருக்கம் இருந்தால், நீங்கள் ஒரு மருத்துவரை அணுக வேண்டும்.

இருப்பினும், மார்பகங்கள் எப்போதும் சீரற்ற அளவில் இருந்தால், கவலைப்பட ஒன்றுமில்லை. மார்பகத்தின் அளவு தாய்ப்பால் கொடுப்பதில் எந்த மாற்றத்தையும் ஏற்படுத்தாது, மேலும் புற்றுநோயின் அபாயத்தை அதிகரிக்காது என்று குப்தா கூறினார்.

“பருவமடையும் போது மார்பகத்தின் அளவு சமச்சீரற்றதாக இருந்தால், அது வளர வளர அப்படியே இருக்க வாய்ப்புள்ளது,” என்று அவர் கூறினார்,

அவர்களுக்கு சிகிச்சையளிக்க எந்த மருத்துவ காரணமும் இல்லை என்றாலும், மார்பக அளவில் தொல்லை தரும் வித்தியாசத்தை சரிசெய்ய காஸ்மெட்டிக் அறுவை சிகிச்சை செய்யலாம்.

மார்பகப் புற்றுநோய்களைத் கண்டறிய மேமோகிராபி பயன்படுத்தப்படுகிறது,

இருப்பினும் இளம் பெண்களில் “மார்பகத்தின் அல்ட்ராசவுண்ட் மூலம்’ எந்த தீங்கற்ற காயத்தையும் அடையாளம் காண முடியும், மேலும் பயாப்ஸி எந்த வீரியம் மிக்க மாற்றங்களையும் நிராகரிக்க முடியும். ”

மார்பகங்களை சுயபரிசோதனை செய்து கொள்ளுமாறு பெண்களை வலியுறுத்தும் குப்தா, “ஒவ்வொரு பெண்ணும் தனது மார்பகத்தின் தோற்றம் மற்றும் உணர்வை அறிந்து கொள்ள வேண்டும். மார்பக புற்றுநோயின் குடும்ப வரலாறு, உடல் பருமன் மற்றும் ஆல்கஹால் போன்றவை மார்பக புற்றுநோய்க்கான சில ஆபத்து காரணிகள் என்று மருத்துவர் குப்தா கூறினார்.

“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news download Indian Express Tamil App.

Web Title: Unequal breasts breast size breast cancer