அனைத்து கவலைகளையும் மறக்க புத்தகம் தான் ஒரே வழி... தூக்கத்துக்கும் அதே வழி தான்!

பகலில் தூங்காமல் இருப்பது, தேனீர், காபி முதலியவற்றை அருந்துவதை குறைப்பது, இருட்டு அறையில் தூங்குவது ஆகியவை முக்கியம்!

பகலில் தூங்காமல் இருப்பது, தேனீர், காபி முதலியவற்றை அருந்துவதை குறைப்பது, இருட்டு அறையில் தூங்குவது ஆகியவை முக்கியம்!

author-image
WebDesk
புதுப்பிக்கப்பட்டது
New Update
uninterrupted sleeping at night

uninterrupted sleeping tips at night

uninterrupted sleeping tips at night : சரியான நேரத்துக்கு தூங்க செல்வதாலும் போதுமான நேரம் துங்குவதாலும் நிறைய நன்மைகள் உண்டு. மற்ற நன்மைகளோடு மூடிய-கண்கள், நோய் எதிர்ப்பு செல்கள் மூளையில் பராமரிப்பு பணிகளை செய்ய அனுமதிக்கிறது. இதனால் மூளை சரியாக செயல்பட அனுமதிக்கிறது. எனவே அடுத்த முறை நாள்முழுவதும் வேலை செய்துவிட்டு நீங்கள் அசதியாக படுக்கும் போது உங்களால் உறங்க முடியவில்லை என்றால் நீங்கள் என்ன செய்ய வேண்டும் தெரியுமா: புத்தகம் வாசியுங்கள்.

Advertisment

மேலும் படிக்க : போதிய தூக்கம் இல்லாவிட்டால் மாரடைப்பு வரலாம் – ஆய்வில் தகவல்

இரவு வெகு நேரம் வரை உறக்கம் வராமல் விழித்து படுத்திருந்து, ஏன் உரக்கம் வரவில்லை என்று யோசித்து கொண்டிருப்பதை விட வாசிக்க ஆரம்பியுங்கள். வாசிப்பதற்கான வெளிச்சம் தரும் விளக்கு மற்றும் வாசிப்பதற்கான ஒரு புத்தகம் இது இரண்டும் தான் உங்களுக்கு தேவை. நீங்கள் விழித்திருக்கும் போது உங்கள் மனம் அசெளகரியமாக அலைகிறது, பல விஷயங்களை பற்றி உங்களை அழுத்தமடைய செய்கிறது. வாசிப்பது இதிலிருந்து உங்கள் கவனத்தை திசைதிருப்புகிறது. தவிர நீங்கள் தளர்வாக ஓய்வெடுக்க வேண்டிய இடம் படுக்கை. அதை நீங்கள் எதிர்மறையான விஷயத்துக்கு, கண்விழித்து படுத்தபடி பல விஷயங்களை அசைபோட பயன்படுத்த முடியாது.

எந்தவகையான வாசிக்கும் புத்தகத்தை நீங்கள் படுக்கைக்கு எடுத்து செல்கிறீர்கள் என்பது முக்கியமில்லை. நீங்கள் ஏற்கனவே விரும்பி வாசித்த ஒரு புத்தகத்தை கூட படுக்கைக்கு எடுத்து செல்லலாம். நிபுணர்கள் கூறுவது ஒரே ஒரு விதி மட்டும்தான் - ஒன்று நீங்கள் படுத்து உறங்க வேண்டும் அல்லது வாசிக்க வேண்டும். எதிர்மறை எண்ணங்கள் உங்கள் மனதை ஆக்கிரமிக்க இடமளிக்க கூடாது. நோக்கம் ஒன்றுதான் நீங்கள் தளர்வாக உணர ஏதாவதொரு நடவடிக்கையை செய்ய வேண்டும். எனவே இதற்கு மாற்றாக நீங்கள் ஓவியம் வரைந்து அதற்கு வண்ணம் தீட்டலாம். அல்லது ஏதாவது விடுகதைக்கு விடை தேடலாம் அது நீங்கள் தூங்கி விழும் வரையாக இருக்க வேண்டும். அறிவியல் அடிப்படையில் இதை நீங்கள் தொடர்ந்து செய்யும் போது நீங்கள் உங்களுடைய தூங்கும் முறை மற்றும் தூக்கத்தின் தரம் இரண்டையும் மேம்படுத்துகிறீர்கள்.

Advertisment
Advertisements

பகலில் தூங்காமல் இருப்பது, தேனீர், காபி முதலியவற்றை அருந்துவதை குறைப்பது, இருட்டு அறையில் தூங்குவது மேலும் மிக சொகுசான ஆடம்பரமான படுக்கைகளில் தூங்காமல் இருப்பது ஆகியவற்றையும் கடைபிடிக்கலாம்.

மேலும் படிக்க : நல்ல தூக்கம் வேண்டுமானால் இவற்றை குடிக்காதீர்கள்!

Lifestyle Healthy Life

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us: