வருடாந்திர பட்ஜெட்டில் மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமனின் புடவை தேர்வு ஒரு பேஷன் அறிக்கையைத் தாண்டி செல்கிறது. இது இந்தியாவின் வளமான பாரம்பரியம் மற்றும் பாரம்பரிய கலைத்திறனுக்கு ஒரு ஒப்புதல் ஆகும்.
இந்த ஆண்டு, தனது தொடர்ச்சியான எட்டாவது மத்திய பட்ஜெட்டில், பீகாரின் சின்னமான மதுபானி கலையால் அலங்கரிக்கப்பட்ட வெள்ளை பட்டுப் புடவையை அணிந்து நிர்மலா சீதாராமன் வருகை தந்து இருந்தார்.
இந்த ஓவியத்தை கையால் வரைந்து பரிசளித்த பத்மஸ்ரீ விருது பெற்ற துலாரி தேவிக்கு மரியாதை செலுத்தும் வகையில், சீதாராமன் ஐந்து கெஜம் புடவை மற்றும் சிவப்பு ரவிக்கையுடன் புடவையை அணிந்த் வந்து இருந்தார். கருப்பு, சிவப்பு மற்றும் ஆரஞ்சு நிற நூல்களில் எம்பிராய்டரி செய்யப்பட்ட மீன்கள் மற்றும் தங்க விளிம்புடன் துணியின் கிரீமி வெள்ளை புடவையின் டிசைனை பூர்த்தி செய்கின்றன.
ரூஃப்டாப்பின் வலைப்பதிவு இடுகையின்படி, பீகாரில் உள்ள எளிய கிராமமான ரந்தியைச் சேர்ந்த துலாரி தேவி, மதுபானி கலையின் இரண்டு வடிவங்களையும் பயிற்சி செய்கிறார். அவை கட்ச்னி அல்லது வரி ஓவியங்கள் மற்றும் பார்னி அல்லது வண்ணங்கள் நிரப்பப்பட்ட ஓவியங்கள் ஆகும்.
2011 ஆம் ஆண்டில் கீதா வுல்ஃப் இணைந்து எழுதிய 'ஃபாலோயிங் மை பெயிண்ட் பிரஷ்' என்ற தனது சுயசரிதையை வெளியிட்டார். மார்ட்டின் லே காஸ் தனது வாழ்க்கை வரலாற்றை 'மிதிலா' என்ற பிரெஞ்சு புத்தகத்தில் எழுதினார்.
ஆங்கிலத்தில் படிக்கவும்:
Union Budget 2025: Finance Minister Nirmala Sitharaman’s Madhubani art sari has a special connection
மதுபானி கலை வடிவத்தில் அவரது மகத்தான பங்களிப்பு மற்றும் அவரது எழுச்சியூட்டும் பயணத்திற்காக, துலாரி தேவிக்கு 2021 இல் பத்மஸ்ரீ விருது வழங்கப்பட்டது.
மதுபானி கலைஞர் விதுஷினி பிரசாத் indianexpress.com - ல் கூறுகையில், மதுபானி கலை ஒரு வெளிப்பாட்டு வடிவத்திற்கு அப்பாற்பட்டது என்றும் மிதிலா பிராந்தியத்தின் ஒரு முக்கியமான கலாச்சார சொத்து என்றும் கூறினார்.
மதுபானி டிசைன்ஸ் மரபுகள், நாட்டுப்புறக் கதைகள் மற்றும் புராணங்களை பிரதிபலிக்கிறது. மேலும் அவற்றின் வரலாறு மற்றும் உள்ளூர் கதைகள் மற்றும் கலை மூலம் புடவையில் ஆவணப்படுத்தப்படுகிறது.
இந்த கலை வடிவம் பெரும்பாலும் பெண்களுக்கு மிகவும் பிடித்ததாக உள்ளது மேலும் நிறைய பெண்கள் இந்த கலை தொழிலில் ஈடுபட்டுள்ளனர். தங்கள் கலைத்திறனையும் மரபையும் தங்களின் அடுத்த சந்ததியினருக்கு கொடுப்பதற்கும், கொண்டாடுவதற்கும், முன்னோக்கி எடுத்துச் செல்வதற்கும் உதவுகிறது. நவீன கால கலை மதுபானி ஓவியங்களை பாரம்பரிய கேன்வாஸ், காகிதம் மற்றும் துணியில் மட்டுமல்ல, டிஜிட்டல் ஊடகங்களிலும் தற்போது வரையாலாம்.