Unknown Facts about Survivor VJ Parvathy Tamil News
Unknown Facts about Survivor VJ Parvathy Tamil News : 'சும்மாவே ரொம்ப அதிகம் பேசுவாங்க. இதுல இதுபோன்ற ஷோ என்றால் கேட்கவே வேண்டாம். இன்னும் என்னவெல்லாம் செய்ய காத்திருக்கிறாரோ' என்கிற கமென்ட்டுகள்தான் சர்வைவர் நிகழ்ச்சியில் விஜே பார்வதி கலந்துகொள்ளப் போகிறார் என்கிற தகவல் வெளியானதிலிருந்து அதிகம் குவிந்துகொண்டு இருக்கின்றன. ஆனால், அவரை பற்றி அதிகம் அறிந்திடாத பல தகவல்களைப் பார்ப்போமா!
Advertisment
பொது நிகழ்ச்சி முதல் சர்வைவர் ஷோ வரை தான் பங்குபெறும் அணைத்து நிகழ்வுகளிலும் பல சர்ச்சைகளை உருவாக்கி வரும் விஜே பார்வதியின் முழு பெயர் பார்வதி சரண். இவர் எல்லோரும் அறியும் விஜே ஆவதற்கு முன், ரேடியோ ஜாக்கியாக பணியாற்றியுள்ளார். சென்னையில் தற்போது செட்டிலாகி இருந்தாலும், மதுரையை பூர்வீகமாகக் கொண்டிருக்கும் இவர் என்றைக்குமே தன் தாய்மொழியை விட்டுக்கொடுத்ததில்லை.
Advertisment
Advertisements
இவர், பத்திரிகை மற்றும் தொடர்பாடலில் முதுகலைப் பட்டம் பெற்றவர். தன் கல்லூரியிலும், வாழ்க்கையின் ஆரம்ப நாட்களிலும் ஓர் நிருபராக வேலை செய்திருக்கிறார். பெரிய ஊடகங்களுக்கு வருவதற்கு முன்பு சில ஆண்டுகள் மதுரையில் ரேடியோ ஜாக்கியாக பணியாற்றினார்.
பிறகு, நாளைய இயக்குநர் மற்றும் குக் வித் கோமாளி 2 உள்ளிட்ட நிகழ்ச்சிகளின் ஒரு பகுதியாக தோன்றினார். என்றாலும், யூடியூப் தளங்களில் பல்வேறு விதமான சர்ச்சைக்குள்ளான தலைப்புகளில் பேசி, மக்களின் பார்வைகளில் தென்பட்டார்.
ஹிப் ஹாப் தமிழா, மாதுரி ஜெயின் மற்றும் பலர் நடிக்கும் சிவகுமாரின் சபதம் எனும் படத்தின் மூலம் வெள்ளித்திரையில் அறிமுகமாகவுள்ளார் பார்வதி. மேலும் அவர், விரைவில் வரவிருக்கும் திரைப்படமான கருங்காப்பியம் வெளியீட்டிற்காகக் காத்திருக்கிறார்.
தொகுப்பாளினி மட்டுமல்ல பார்வதி ஓர் திறமையான ஓவியரும் கூட. மேலும், இவருக்குப் பல இடங்களுக்குச் சென்று புதுமையான விஷயங்களைக் கற்றுக்கொள்வதென்றால் மிகவும் பிடிக்கும். அதுவே, சர்வைவர் நிகழ்ச்சிக்கு இவர் செல்வதற்கும் காரணமாக அமைந்தது. பார்வதி, சமூக ஊடகங்களில் மிகவும் ஆக்டிவ். இவருக்கென்று தனி ரசிகர்களும் உள்ளனர்.
"தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil