வசம்பு, மஞ்சளுடன் இந்த கீரை… இப்படி அப்ளை செய்தால் முகத்தில் தேவையற்ற முடிகள் நீங்கும், பளபளப்பாகும்; டாக்டர் நித்யா
பெண்களுக்கு ஏற்படும் தேவையற்ற முக முடி வளர்ச்சி (unwanted facial hair growth) பொதுவான கவலையாகும். இது உடல்நலக் கோளாறுகளின் அறிகுறியாகவும் இருக்கலாம். இந்தப் பிரச்னைக்கான காரணங்கள், அவற்றை சித்த மருத்துவத்தின் மூலம் எவ்வாறு கையாள்வது?
பெண்களுக்கு ஏற்படும் தேவையற்ற முக முடி வளர்ச்சி (unwanted facial hair growth) பொதுவான கவலையாகும். இது உடல்நலக் கோளாறுகளின் அறிகுறியாகவும் இருக்கலாம். இந்தப் பிரச்னைக்கான காரணங்கள், அவற்றை சித்த மருத்துவத்தின் மூலம் எவ்வாறு கையாள்வது?
வசம்பு, மஞ்சளுடன் இந்த கீரை… இப்படி அப்ளை செய்தால் முகத்தில் தேவையற்ற முடிகள் நீங்கும், பளபளப்பாகும்; டாக்டர் நித்யா
பெண்களுக்கு ஏற்படும் தேவையற்ற முக முடி வளர்ச்சி (unwanted facial hair growth) பொதுவான கவலையாகும். இது உடல்நலக் கோளாறுகளின் அறிகுறியாகவும் இருக்கலாம். இந்தப் பிரச்னைக்கான காரணங்கள், அவற்றை சித்த மருத்துவத்தின் மூலம் எவ்வாறு கையாள்வது? என்பது குறித்து டாக்டர் நித்யா விரிவாக விளக்குகிறார்.
Advertisment
தேவையற்ற முடி வளர்ச்சிக்கு முக்கிய காரணங்கள்
பெண்களின் உடலில் டெஸ்டோஸ்டிரோன் (ஆண் ஹார்மோன்) அளவு அதிகரிப்பது இந்த பிரச்னைக்கு முக்கிய காரணமாகும். ஹார்மோன் சமநிலையின்மை பல உடல்நலப் பிரச்சனைகளுக்கு வழிவகுக்கும். பாலிசிஸ்டிக் ஓவரி சிண்ட்ரோம் PCOD என்பது பெண்களுக்கு பொதுவாகக் காணப்படும் ஹார்மோன் கோளாறு. இது ஒழுங்கற்ற மாதவிடாய், கருவுறுதல் பிரச்சனைகள் மற்றும் தேவையற்ற முடி வளர்ச்சி போன்ற அறிகுறிகளை ஏற்படுத்தும். தைராய்டு சுரப்பியின் செயல்பாட்டில் ஏற்படும் கோளாறுகளும் முடி வளர்ச்சிக்கு காரணமாகலாம்.
நீண்ட காலமாக மாதவிடாய் வராமல் இருப்பது அல்லது ஒழுங்கற்ற மாதவிடாய் சுழற்சி ஹார்மோன் ஏற்றத்தாழ்வுகளைக் குறிக்கலாம். அதிகப்படியான கொழுப்பு நிறைந்த உணவுகள், துரித உணவுகள் (ஃபாஸ்ட் ஃபுட்ஸ்) மற்றும் ரசாயனங்கள் நிறைந்த உணவுகள் உடல் எடையை அதிகரிக்கச் செய்து, ஹார்மோன் சமநிலையின்மையை ஏற்படுத்தலாம். சித்த மருத்துவம் தேவையற்ற முடி வளர்ச்சிக்கு அக மற்றும் புற என இருவகையான தீர்வுகளை வழங்குகிறது.
Advertisment
Advertisements
உள் மருந்துகள் (Internal Remedies): உடலின் ஹார்மோன் சமநிலையை மீட்டெடுப்பதன் மூலம் பிரச்னையின் மூல காரணத்தை சித்த மருத்துவம் சரிசெய்ய முற்படுகிறது.
ஓமம், சதக்குப்பை, பெருஞ்சீரகம் கலவை: ஹார்மோன் சமநிலையை சரிசெய்ய ஒரு எளிய தீர்வு இது. தலா 100 கிராம் ஓமம், சதக்குப்பை மற்றும் பெருஞ்சீரகம் ஆகியவற்றை சம அளவில் எடுத்து வறுத்து பொடி செய்ய வேண்டும். தினமும் காலை ஒரு ஸ்பூன் பொடியை வெந்நீரில் கலந்து குடிக்கலாம். இது ஈஸ்ட்ரோஜன் அளவை அதிகரிக்க உதவும்.
குமரி கஷாயம்: PCOD மற்றும் ஹார்மோன் சமநிலையின்மை போன்ற பிரச்சனைகளுக்கு குமரி கஷாயம் போன்ற சித்த மருந்துகள் மிகவும் பயனுள்ளதாக இருக்கும். இவை உடலின் உள் அமைப்பை சீர்செய்து, ஹார்மோன் செயல்பாட்டை மேம்படுத்துகின்றன.
வெளிப்புற பூச்சு (External Application)
தேவையற்ற முடியை அகற்றுவதற்கும், மீண்டும் வளராமல் தடுப்பதற்கும் வெளிப்புற பூச்சுகள் உதவுகின்றன. வசம்பு, மஞ்சள் மற்றும் குப்பைமேனி பொடிகளை சம அளவில் எடுத்துக்கொள்ள வேண்டும். இதனுடன் எலுமிச்சை சாறு அல்லது படிகார நீர் சேர்த்து பசை போல கலந்து முகத்தில் பூச வேண்டும். இரண்டு மணி நேரம் கழித்து முகத்தைக் கழுவினால், முடி உதிரும். மஞ்சள் ஒரு பாரம்பரியமான அழகுப் பொருளாகும். தினமும் மஞ்சள் தேய்த்துக் குளிப்பது தேவையற்ற முடி வளர்ச்சியைத் தடுக்க உதவும்.
அதிக எண்ணெய் நிறைந்த உணவுகள் மற்றும் ஃபாஸ்ட் ஃபுட்ஸ் போன்றவற்றைத் தவிர்க்க வேண்டும். ஆரோக்கியமான, சரிவிகித உணவை உட்கொள்வது முக்கியம். அதிக உடல் எடை, குறிப்பாக டீன் ஏஜ் வயதினருக்கு, ஹார்மோன் ஏற்றத்தாழ்வுகளுக்கு வழிவகுக்கும். எனவே, உடல் எடையைக் குறைப்பது மிகவும் அவசியம். வேக்சிங் செய்வதைத் தவிர்க்க வேண்டும். ஏனெனில், இது நிணநீர் முனைகளில் (lymph nodes) தொற்றுநோய்களை ஏற்படுத்தலாம்.
தேவையற்ற முக முடி வளர்ச்சி சாதாரண பிரச்னை அல்ல. இது உடல் நலக் கோளாறுகளின் அறிகுறியாக இருக்கலாம். எனவே, சித்த மருத்துவ நிபுணரின் ஆலோசனையைப் பெற்று, சரியான சிகிச்சை பெறுவது நல்லது. ஆரோக்கியமான வாழ்க்கை முறை மற்றும் சரியான உணவுப் பழக்கவழக்கங்கள் மூலம் இந்தப் பிரச்சனையை வெற்றிகரமாக சமாளிக்க முடியும்.
பொறுப்பு துறப்பு: இந்தக் கட்டுரை பொது தளத்தில்/ நாங்கள் தொடர்பு கொண்டு பேசிய நிபுணர்களிடம் இருந்து பெறப்பட்ட தகவல் அடிப்படையில் எழுதப்பட்டுள்ளது. இக்கட்டுரையில் குறிப்பிட்டு இருப்பதை நீங்கள் கடைபிடிக்கும் முன், உங்கள் குடும்ப மருத்துவர் அல்லது உங்கள் உடல்நலப் பயிற்சியாளரை அணுகும்படி கேட்டுக் கொள்கிறோம்.