பிசிஓடி, தைராய்டு மற்றும் ஹார்மோன் இம்பேலன்ஸ் பிரச்சனை உள்ளவர்களுக்கு முகம் மற்றும் உடலில் அதிக அளவு முடி வளர்வதற்கு வாய்ப்பு உள்ளது என்று மருத்துவர் நித்யா கூறுகிறார்.
இதுகுறித்து அவர் தனது நித்யாஸ் வரம் யூடியூப் சேனலில் சித்தா டாக்டர் நித்யா கூறி இருக்கும் தகவல்கள் பின்வருமாறு,
இன்றைய காலகட்டத்தில் சிறு வயதிலேயே பெண் பிள்ளைகளுக்கு இது போன்ற பிரச்சனைகள் ஏற்பட வாய்ப்பு உள்ளது. அதற்கு அவர்களின் உணவு பழக்கம் தான் முக்கிய காரணம் என்று டாக்டர் நித்யா கூறுகிறார்.
இது மாதிரியான பிரச்சனைகள் வராமல் தடுக்க எண்ணெய் பதாரத்தங்களை தவிர்க்க வேண்டும் என்றும் அப்போது தான் உடல் எடை கட்டுக்குள் இருக்கும். உடல் பருமன் வயதிற்கேற்ப இருக்க வேண்டும். அதிக உடல் எடை இருந்தால் அதை கட்டாயம் குறைக்க வேண்டும்.
இரண்டாவது உடலில் ஹார்மோன் அளவுகளை பரிசோதனை செய்து பார்த்துவிட்டு அதற்கான சிகிச்சை எடுக்க வேண்டும். ஹார்மோன் பிரச்சனைகளால் தான் நமக்கு இதுமாதிரியான முடி வளர்ச்சி ஏற்படுகிறது. ஆதலால் ஹார்மோன் பிரச்சனையை சரிசெய்வது அவசியம்.
மூன்றாவது உணவில் கவனம். உணவில் இயற்கை உணவுகள் சிலவற்றை எடுத்து கொள்ள வேண்டியது அவசியம். அதற்காக ஒமம், சதக்குப்பை, பெருஞ்சீரகம் வைத்து ஒரு பொடி தயார் செய்யலாம். இது ஹார்மோன் அளவை கட்டுப்படுத்த உதவும்.
செய்முறை: ஒமம், சதக்குப்பை, பெருஞ்சீரகம் ஆகிய மூன்றையும் வறுத்து பொடி செய்து தண்ணீரில் கொதிக்க விட்டு தேன், கருப்பட்டி, நாட்டுச் சர்க்கரை, எலுமிச்சை சாறு சேர்த்து குடிக்கலாம். ஒரே மாதத்தில் நல்ல முன்னேற்றத்தை காணலாம்.
இது உடல் எடை மற்றும் ரத்தத்தில் உள்ள டாக்ஸின்ஸ்களை குறைக்க உதவும்.
மஞ்சள் Use பண்ணா Facial Hair கம்மி ஆகுமா? Facial Hair Removal Healthy Skin-க்கு இத பண்ணா போதும்
செய்முறை: பின்னர் குளிப்பதற்கு சில மூலிகைகளை பயன்படுத்தலாம். அதற்காக வசம்பு, மஞ்சள் இரண்டையும் வறுத்து பொடி செய்து பூச்சி விழாமல் வைக்கவும்.
பின்னர் இதனை படிகார நீர், குப்பைமேனி சாறு, எலுமிச்சை சாறுடன் சேர்த்து குளிக்கலாம். பேஸ்பேக் மாதிரி முகத்தில் போட்டு ஒரு 2 மணி நேரம் கழித்து கழுவலாம். முடிகள் உதிரும் மற்றும் முகம் பொலிவாக இருக்கும்.
பொறுப்பு துறப்பு: இந்தக் கட்டுரை பொது தளத்தில்/ நாங்கள் தொடர்பு கொண்டு பேசிய நிபுணர்களிடம் இருந்து பெறப்பட்ட தகவல் அடிப்படையில் எழுதப்பட்டுள்ளது. இக்கட்டுரையில் குறிப்பிட்டு இருப்பதை நீங்கள் கடைபிடிக்கும் முன், உங்கள் குடும்ப மருத்துவர் அல்லது உங்கள் உடல்நலப் பயிற்சியாளரை அணுகும்படி கேட்டுக் கொள்கிறோம்.