முகத்தில் வளரும் தேவையற்ற முடிகளை நீக்க… சர்க்கரையுடன் எலுமிச்சை சாறு சேர்த்து அப்ளை பண்ணுங்க; டாக்டர் ராஜலெட்சுமி
பெண்களுக்கு முக்கத்தில் வளரும் தேவையற்ற ரோமங்களை இயற்கையான முறையில் நீக்குவதற்கு சர்க்கரையுடன் எலுமிச்சை சாறு சேர்த்து அப்ளை பண்ணுங்கள் என்று டாக்டர் ராஜலட்சுமி 3 சூப்பரான டிப்ஸ்களை வழங்கியுள்ளார். அதை எப்படி செய்வது என்று பார்ப்போம் வாருங்கள்.
பெண்களுக்கு முக்கத்தில் வளரும் தேவையற்ற ரோமங்களை இயற்கையான முறையில் நீக்குவதற்கு சர்க்கரையுடன் எலுமிச்சை சாறு சேர்த்து அப்ளை பண்ணுங்கள் என்று டாக்டர் ராஜலட்சுமி 3 சூப்பரான டிப்ஸ்களை வழங்கியுள்ளார். அதை எப்படி செய்வது என்று பார்ப்போம் வாருங்கள்.
டாக்டர் ராஜலட்சுமி பயனுள்ள பல மருத்துவ ஆலோசனைகளை, டிரெடிஷனல் கேர் ஹாஸ்பிட்டல் ர் ராஜலட்சுமி (Traditional Care Hospital Dr. D. Rajalakshmi) என்று யூடியூப் சேனலில் வழங்கி வருகிறார். பெண்களுக்கு முகத்தில் வளரும் தேவையற்ற முடிகளை இயற்கையான முறையில் நீக்குவது எப்படி என்று கூறியுள்ளார். (image Source: Freepik)
பெண்களுக்கு முக்கத்தில் வளரும் தேவையற்ற ரோமங்களை இயற்கையான முறையில் நீக்குவதற்கு சர்க்கரையுடன் எலுமிச்சை சாறு சேர்த்து அப்ளை பண்ணுங்கள் என்று டாக்டர் ராஜலட்சுமி 3 சூப்பரான டிப்ஸ்களை வழங்கியுள்ளார். அதை எப்படி செய்வது என்று பார்ப்போம் வாருங்கள்.
Advertisment
டாக்டர் ராஜலட்சுமி பயனுள்ள பல மருத்துவ ஆலோசனைகளை, டிரெடிஷனல் கேர் ஹாஸ்பிட்டல் ர் ராஜலட்சுமி (Traditional Care Hospital Dr. D. Rajalakshmi) என்று யூடியூப் சேனலில் வழங்கி வருகிறார். பெண்களுக்கு முகத்தில் வளரும் தேவையற்ற முடிகளை இயற்கையான முறையில் நீக்குவது எப்படி என்று கூறியுள்ளார். அதை அப்படியே இங்கே தருகிறோம்.
பெண்களுக்கு முகத்தில் தாடைப் பகுதிகள் மற்றும் மார்புப் பகுதிகளில் முடி வளர்வதற்கு ஹார்மோன் சமநிலை இல்லாதது காரணமாக இருக்கலாம். இல்லையென்றால், டெஸ்டோஸ்டெரோன் அதிகமாக இருந்தாலும் முகத்தில் ரோமங்கள் வளரலாம். இதற்கு சிகிச்சை எடுத்துக்கொள்ள வேண்டும் என்று டாக்டர் ராஜலட்சுமி பரிந்துரைக்கிறார்.
அதே நேரத்தில், இந்த ஹார்மோன் சமநிலை இல்லாததால், வளரும் ரோமங்களை நீக்குவதற்கு லோஷன்கள் பயன்படுத்துவது, வேக்ஸிங், திரட்டிங், லேசர் சிகிச்சை செய்தாலும் ரோமங்கள் மீண்டும் வளரவே செய்யும். அதனால், பெண்களுக்கு முகத்தில் வளரும் ரோமங்களை இயற்கையான முறையில் நீக்குவது எப்படி என்று டாக்டர் ராஜலட்சுமி கூறியுள்ளார்.
Advertisment
Advertisements
பெண்களுக்கு முகத்தில் வளரும் ரோமங்களை வீட்டிலேயே இயற்கையான முறையில் நீக்க வேண்டும் என்றால், இதை செய்ய வேண்டும். கடலை மாவு 3 டீஸ்பூன் எடுத்துக்கொள்ளுங்கள். மஞ்சள் தூள் 2 டீஸ்பூன் எடுத்துக்கொள்ளுங்கள். ஒரிஜினல் சந்தனத்தூள் 2 சிட்டிகை எடுத்துக்கொள்ளுங்கள். ஒரு அரை எலுமிச்சையில் இருந்து எலுமிச்சை சாறு எடுத்துக்கொள்ளுக்கள். இவை எல்லாவற்றையும் நன்றாகக் கலந்து முகத்தில் எங்கே எல்லாம் ரோமங்கள் இருக்கிறதோ அங்கெல்லாம் தடவுங்கள். அதற்கு பிறகு, 15-20 நிமிடங்கள் அப்படியே விட்டுவிடுங்கள். அதற்கு பிறகு, முகத்தைக் கழுவிடு விடுங்கள். இப்படி தொடர்ந்து 1 மாதம் செய்ய வேண்டும். அப்படி, பயன்படுத்தும்போது நல்ல சிறப்பான பலன்களைத் தரும் என்று டாக்டர் ராஜலட்சுமி கூறுகிறார்.
மஞ்சள் தடவினால் முடி வளராது என்பது கிடையாது. கடலை மாவு போடுவதால், அது பேக்கிங் மாதிரி முடிகளை எடுத்துவிடும். முடிகளை எடுத்துவிட்டால், முடிகள் இருந்த வேர்கால்களால் தாபிதங்கள் ஏற்படும். அந்த தாபிதம் ஏற்படக் கூடாடு என்பதற்காகத்தான் மஞ்சள் பயன்படுத்துகிறோம். சந்தனம் குளிர்ச்சியைத் தரும். எலுமிச்சை சாறு முடி மீண்டும் வளரவிடாமல் நிறுத்துவதற்காக பயன்படுத்துகிறோம் என்று டாக்டர் ராஜலட்சுமி கூறுகிறார்.
அதே போல, பெரியதாக இருக்கக்கூடிய சர்க்கரையை எடுத்துக்கொள்ளுங்கள். அதில், எலுமிச்சை சாறு கலந்துகொள்ளுங்கள். முதலில் வெந்நீர் வைத்து முகத்தைத் துடைத்துக்கொள்ளுங்கள். பிறகு, சர்க்கரை, எலுமிச்சை கரைசலை முகத்தில் தடவுங்கள். ஒரு 15-20 நிமிடங்கள் அப்படியே விட்டுவிடுங்கள். அதற்கு பிறகு, குளிர்ந்த நீரில், முகத்தை துடைத்துவிடுக்கள். இதை 6 வாரங்கள் தொடர்ந்து செய்ய வேண்டும். இவை இரண்டையும் தொடர்ந்து செய்தால், சருமம் பாதிக்காது. இப்படி செய்வதால், ரோமங்களின் வேர்க்கால்களை சேதப்படுத்துவதால், அடுத்து வளரும் ரோமங்கள் அடர்த்தியாகவோ, கருமையாகவோ இல்லாமல் போகும்.
இதுமட்டுமில்லாமல், ஹார்மோன் சமநிலை இன்மை பிரச்னைக்கு கண்டிப்பாக சிகிச்சை எடுத்துக்கொண்டு மருந்து சாப்பிட வேண்டும் என்று டாக்டர் ராஜலட்சுமி கூறுகிறார்.
பொறுப்புத் துறப்பு: இந்த கட்டுரை பொதுத் தகவல் மற்றும்/அல்லது நாங்கள் பேசிய நிபுணர்களின் தகவல்களின் அடிப்படையில் அமைந்துள்ளது. எந்தவொரு வழக்கத்தையும் தொடங்குவதற்கு முன் எப்போதும் உங்கள் சுகாதார நிபுணரை அணுகவும்.