சமையலுக்கு மட்டும்தான் உளுந்து பயன்படும் என்று பலரும் நினைக்கிறார்கள். ஆனால், சருமப் பொலிவிற்கும் உளுந்து உதவுகிறது என்பது உங்களுக்குத் தெரியுமா?
Advertisment
உளுந்து ஃபேஸ் பேக் செய்வது எப்படி?
ஒரு கைப்பிடி உளுந்தை எடுத்து, அதனுடன் சிறிது பால் சேர்த்து சுமார் 45 நிமிடங்கள் ஊற வைக்கவும். ஊறிய உளுந்தை மிக்ஸியில் போட்டு அரைத்தால், கிரீமி பதத்தில் ஒரு கலவை கிடைக்கும். இதை மூன்று நாட்கள் வரை ஃப்ரிட்ஜில் வைத்து பயன்படுத்தலாம். மூன்று நாட்களுக்கு மேல் வைத்தால் புளித்துவிடும்.
Advertisment
Advertisements
புளித்ததை ஒருபோதும் முகத்தில் பயன்படுத்த வேண்டாம்!
உளுந்து ஃபேஸ் பேக்கைப் பயன்படுத்துவது எப்படி?
தயார் செய்த உளுந்துக் க்ரீமை முகத்தில் மென்மையாகப் பூசவும். கண்கள் மற்றும் உதடுகளைச் சுற்றித் தடவுவதைத் தவிர்க்கவும். 10 முதல் 15 நிமிடங்கள் வரை உலர விடவும்.
காய்ந்ததும், முகத்தை லேசாக சுரண்டிவிட்டு, குளிர்ந்த நீரில் கழுவவும்.
உளுந்து ஃபேஸ் பேக்கைப் பயன்படுத்திய பிறகு உங்கள் சருமம் உடனடியாகப் பொலிவு பெறுவதை நீங்கள் ஆச்சரியத்துடன் உணர்வீர்கள்.