யூரின் சொட்டு சொட்டாக போக கஷ்டம்? இந்த பிரச்சனையாக இருக்கும்: எளிய தீர்வு சொல்லும் டாக்டர்

சிறுநீர் வெளியேறும் போது சிரமமாக இருந்தால் என்ன வகையான பிரச்சனையாக இருக்கும் என்று மருத்துவர் கார்த்திகேயன் விளக்கம் அளித்துள்ளார். மேலும், இதன் அறிகுறிகளையும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

சிறுநீர் வெளியேறும் போது சிரமமாக இருந்தால் என்ன வகையான பிரச்சனையாக இருக்கும் என்று மருத்துவர் கார்த்திகேயன் விளக்கம் அளித்துள்ளார். மேலும், இதன் அறிகுறிகளையும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

author-image
WebDesk
New Update
Urinary infection

சில நேரங்களில் சிறுநீர் கழிக்கும் பாதை அடைபட்டு சிறுநீர் கழிப்பதில் சிரமம் ஏற்படும். இதற்கு பல்வேறு காரணங்கள் இருக்கிறது என மருத்துவர் கார்த்திகேயன் தெரிவித்துள்ளார். குறிப்பாக, சிறுநீர்க்குழாய் உள்நோக்கி அல்லது வடிகுழாய் செலுத்தும் போது ஏற்படும் காயம், புற்றுநோய்க்காக மேற்கொண்ட கதிர்வீச்சு சிகிச்சை மற்றும் புரோஸ்டேட் சுரப்பி விரிவாக்கம் போன்றவற்றால் இவை ஏற்படும் வாய்ப்பு இருக்கிறது. இது தவிர, பால்வினை நோய்த்தொற்றுகள் மூலமாகவும் இது ஏற்படும். இந்த பாதிப்புகள் குறித்து தனது யூடியூப் சேனலில் அவர் விளக்கம் அளித்துள்ளார்.

Advertisment

இந்த பிரச்சனைகள் இருந்தால் சிறுநீர்ப்பை முழுமையாக வெளியேறாமல் இருப்பது, சிறுநீர் துளி துளியாக வெளியேறுதல், சிறுநீர் கழிக்கும் போது ஏற்படும் வலி, சிறுநீர் பாதை நோய்த்தொற்றுகள் ஏற்படுதல் ஆகியவை இருக்கும் என்று மருத்துவர் கார்த்திகேயன் தெரிவித்துள்ளார். இதனை சிறுநீர் பரிசோதனைகள், அல்ட்ராசவுண்டு மற்றும் எம்.ஆர்.ஐ போன்ற ஸ்கேன்கள் மூலம் கண்டறியலாம்.

எனினும், இந்தப் பிரச்சனையை சில வழிமுறைகள் மூலம் குணப்படுத்த முடியும். நோய்த் தொற்றுகளுக்கு சிகிச்சை அளித்தல், அடைப்பை நீக்க அறுவை சிகிச்சை மேற்கொள்ளுதல், சிறுநீர் கழிக்கும் பாதையை திறந்து வைக்க ஸ்டென்ட் பொருத்துதல் ஆகியவற்றை மேற்கொள்ளலாம் என்று மருத்துவர் கார்த்திகேயன் அறிவுறுத்துகிறார்.

இந்த பாதிப்பு இருக்கும்பட்சத்தில் உணவு முறைகளிலும் சில மாற்றங்கள் மேற்கொள்ள வேண்டும். அந்த வகையில், காபி, காரமான உணவுகள், மது மற்றும் அமிலத்தன்மை கொண்ட பழங்கள் போன்றவற்றை தவிர்க்க வேண்டும். நார்ச்சத்து நிறைந்த காய்கறிகள், பூண்டு மற்றும் இஞ்சி போன்றவற்றை அன்றாட உணவில் எடுத்துக் கொள்ளலாம் என்று மருத்துவர் கார்த்திகேயன் பரிந்துரைக்கிறார்.

Advertisment
Advertisements

 

பொறுப்பு துறப்பு: இந்தக் கட்டுரை பொது தளத்தில்/ நாங்கள் தொடர்பு கொண்டு பேசிய நிபுணர்களிடம் இருந்து பெறப்பட்ட தகவல் அடிப்படையில் எழுதப்பட்டுள்ளது. இக்கட்டுரையில் குறிப்பிட்டு இருப்பதை நீங்கள் கடைபிடிக்கும் முன், உங்கள் குடும்ப மருத்துவர் அல்லது உங்கள் உடல்நலப் பயிற்சியாளரை அணுகும்படி கேட்டுக் கொள்கிறோம்.

Tips to keep your kidneys healthy

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us: