scorecardresearch

இடுப்பு வலி, பிறப்புறுப்பில் எரிச்சல்.. பெண்களே இந்த அறிகுறிகளை புறக்கணிக்காதீங்க

சிறுநீர் பாதை தொற்று ஆபத்தை குறைக்க சில நிபுணர்கள் அங்கீகரித்த குறிப்புகள் இங்கே:

urinary tract infection
urinary tract infection

சிறுநீர் பாதை நோய்த்தொற்று (UTI) என்பது சிறுநீரகங்கள், சிறுநீர்ப்பை மற்றும் சிறுநீர்க்குழாய் உட்பட சிறுநீர் அமைப்பின் எந்தப் பகுதியிலும் ஏற்படக்கூடிய ஒரு தொற்று ஆகும். ஆனால் பொதுவாக, தொற்று சிறுநீர்ப்பை மற்றும் சிறுநீர்க்குழாய் இருக்கும் கீழ் சிறுநீர் பாதையில் ஏற்படுகிறது.

டாக்டர் ஜாக்ரிதி வர்ஷ்னியின் கூற்றுப்படி, பெண்களில் யோனி மற்றும் ஆசனவாய் ஆகியவை உடற்கூறியல் ரீதியாக ஒன்றுக்கொன்று நெருக்கமாக அமைந்துள்ளன, இதனால் குடல் பாக்டீரியாக்கள், சிறுநீர்க்குழாய்க்குள் நுழைவதை எளிதாக்குகிறது. இதனால்தான் பெண்கள் சிறுநீர் பாதை நோய்த்தொற்றுகளுக்கு ஆளாகிறார்கள், என்று கூறினார்.

டாக்டர் வர்ஷ்னியின் கூற்றுப்படி, சிறுநீர் பாதை நோய்த்தொற்று அறிகுறிகள்:

* சிறுநீர் கழிக்கும் போது எரியும் உணர்வு

*சிறுநீர் கழித்த பிறகும், சிறுநீர் கழிக்க வேண்டும் என்ற வலுவான தூண்டுதல்

*அடிக்கடி சிறுநீர் கழித்தல் அல்லது சிறிதளவு சிறுநீர் கழித்தல்

* சிறுநீரின் மங்கலான நிறம்

*சிறுநீரில் ரத்தத்தின் அறிகுறிகள்

* சிறுநீரில் கடுமையான வாசனை

* இடுப்பு வலி

பொதுவாக, பாக்டீரியா சிறுநீர்க்குழாய் வழியாக சிறுநீர் பாதையில் நுழைந்து சிறுநீர்ப்பையில் பரவும்போது ஒரு நபர் தொற்றுக்கு ஆளாகிறார். மேலும், சிறுநீர் மண்டலத்தின் பாதுகாப்பு தோல்வியடையும் போது, ​​பாக்டீரியாக்கள் பாதையில் ஒரு முழுமையான தொற்றுநோயாக வளரலாம்.

நீரிழிவு நோய், மோசமான சுகாதாரம், பாதுகாப்பற்ற உடலுறவு, சிறுநீரை அதிக நேரம் அடக்கி வைத்திருப்பது அல்லது சிறுநீரகக் கற்களால் பாதையில் அடைப்பு போன்ற வளர்சிதை மாற்றக் கோளாறுகள் சிறுநீர் பாதை தொற்றின் பொதுவான காரணங்கள், ”என்று டாக்டர் வர்ஷ்னி கூறினார்.

சிறுநீர் பாதை தொற்று ஆபத்தை குறைக்க சில நிபுணர்கள் அங்கீகரித்த குறிப்புகள் இங்கே:

* தண்ணீர் குடிப்பது சிறுநீரை நீர்த்துப்போகச் செய்கிறது. நீர் அதிக சிறுநீர் கழிக்க வழிவகுக்கிறது, இது சிறுநீர் பாதையில் இருந்து பாக்டீரியாவை அகற்ற அனுமதிக்கிறது.

* குருதிநெல்லி சாற்றின்  (cranberry juice) பயன்பாட்டை ஆய்வுகள் முழுமையாக ஆதரிக்கவில்லை என்றாலும், குருதிநெல்லியில் பாக்டீரியா எதிர்ப்பு பண்புகள் இருப்பதாக அறியப்படுகிறது, இது சிறுநீர் பாதை தொற்றுக்கு எதிராக உதவுகிறது.

*சிறுநீர் அல்லது மலம் கழித்த பிறகு உங்கள் அந்தரங்கங்க உறுப்புகளை சரியாக கழுவுவது, ஆசனவாயில் இருந்து பிறப்புறுப்பு மற்றும் சிறுநீர்க்குழாய் வரை பாக்டீரியா பரவுவதை தடுக்க உதவுகிறது.

* உடலுறவு கொண்ட பிறகு சிறுநீர் கழிப்பது பாக்டீரியாவை வெளியேற்ற சிறந்தது.

* ஆணுறைகள் பாக்டீரியா வளர்ச்சிக்கு பங்களிக்கின்றன. பிறப்புறுப்பு பகுதியில் டியோடரண்ட் ஸ்ப்ரே மற்றும் பவுடர்களைப் பயன்படுத்துவது சிறுநீர்க்குழாய் எரிச்சலை ஏற்படுத்தும்.

“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news download Indian Express Tamil App.

Web Title: Urinary tract infection symptoms uti treatment