யூரினரி இன்ஃபெக்ஷன் எனப்படும் சிறுநீர்ப்பாதை தொற்று பெண்களிடம் இப்போது மிகவும் பரவலாக இருப்பதைப் பார்க்கிறோம். இந்தத் தொற்று ஏற்பட பல காரணங்கள் இருக்கலாம். அவற்றில் ஒன்று உடலுறவு.
உங்கள் கணவருக்கு நீரிழிவு இருந்தால் மனைவிக்கு சிறுநீர் தொற்று உடலுறவு மூலமாக வரும். நீரிழிவு இருப்பவர்கள் இதுபோன்ற தொற்றுகளுக்கு எளிதில் இலக்காவார்கள்.
ஆனால், அவர்களுக்கு தொற்று இருப்பதை உணரவே பல நாள்கள் ஆகும். அறிகுறிகள் ஏதுமில்லை என்பதால் அவர்களுக்கு எந்தப் பிரச்னையும் இல்லை என்று நினைத்து கொள்வார்கள்.
எனவே, உங்கள் கணவருக்கு நீரிழிவு இருப்பதால் நீங்கள் அவருக்கும் சேர்த்தே யூரின் ரொட்டீன் மற்றும் யூரின் கல்ச்சர் டெஸ்ட்டுகளை எடுத்துப் பார்ப்பது அவசியம். ஒருவேளை அதில் இருவருக்குமோ, ஒருவருக்கு மட்டுமோ பிரச்னை இருப்பது உறுதியானால் அதற்கேற்ப சிகிச்சைகள் கொடுக்கப்பட வேண்டும். கட்டுப்பாடற்ற நீரிழிவும் இதற்கு ஒரு காரணம் என்பதால் உங்கள் கணவரின் ரத்தச் சர்க்கரை அளவை அடிக்கடி பரிசோதியுங்கள்.

நீங்கள் வேலைக்குச் செல்லும் மகளிர் என்றால் அங்குள்ள கழிவறை சுகாதாரமும் கவனிக்கப்பட வேண்டும்.
சுத்தமாக இல்லாத கழிவறைகளை பயன்படுத்தினாலும் அல்லது நீங்கள் கழிவறை உபயோகிப்பதைத் தவிர்த்து சிறுநீரை நீண்ட நேரம் அடக்கினாலும்கூட உங்களுக்கு இந்தத் தொற்று வரலாம்.
வெள்ளைப் போக்கு அதிகமிருக்கிறதா என்றும் பார்க்க வேண்டும்.
மலச்சிக்கல் பிரச்னைக்கும் சிறுநீர் தொற்று நோய்க்கும் கூட நெருங்கிய தொடர்புண்டு. சிகிச்சைக்கு வரும் பெண்களிடம் மலச்சிக்கல் இருக்கிறதா என்பதை கவனிக்க வேண்டும்.
தகவல் உதவி: சித்த மருத்துவ நிபுணர் முத்துக்குமார், 9344186480
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“