Urulai Kilangu varuval recipe potato fry : சூப்பர் உருளைக்கிழங்கு வருவல். பேச்சுலர்ஸ் கூட சுலபமா செஞ்சிடலாம்! செய்யும்போதே வாசனை பசியைத் தூண்டும்.
Advertisment
உருளைக்கிழங்கு வறுவல் புதினா புலாவ், கொத்தமல்லி புலாவ், தயிர் சாதம், வெஜ் பிரியாணி உள்ளிட்ட எல்லா வகையான கலவை சாதத்திற்கும் பொருத்தமா இருக்கும்.
சின்ன உருளைக் கிழங்கு - 1 கிலோ
வெங்காயம் - 100 கிராம்
தாளிக்க - 4
மஞ்சள் தூள் - 1/2 ஸ்பூன்
மிளகாய்த் தூள் - 2 ஸ்பூன்
மல்லித்தூள் - 3 ஸ்பூன்
இஞ்சிபூண்டு விழுது - 1 ஸ்பூன்
எண்ணெய் - தேவைக்கு ஏற்ப
கடுகு,உளுத்தம் பருப்பு - தாளிக்க
கடலைப் பருப்பு - தாளிக்க தேவையான அளவு
உப்பு - தேவையான அளவு
கொத்தமல்லித் தழை, கறிவேப்பிலை சிறிதளவு
செய்முறை:
உருளைக் கிழங்கை வேகவைத்து தோலுரித்து கொள்ளவும். ஒரு வாணலியில் எண்ணெய்யை ஊற்றி காய்ந்ததும் கடுகு, உளுத்தம் பருப்பு, கடலைப் பருப்பு, கறிவேப்பிலை, போட்டு தாளித்ததும் அதில் இஞ்சிபூண்டு விழுது, வெங்காயம் இரண்டையும் போட்டு நன்கு வதக்கவும்.
அத்துடன் தக்காளியையும் சேர்த்து நன்கு வதக்கி பின் உருளைக் கிழங்கையும் சேர்த்து நன்கு கிளறவும். அதனுடன் மஞ்சள் தூள், மிளகாய்த் தூள், தனியாத்தூள், உப்பு என எல்லாவற்றையும் சேர்த்து நன்கு கிளறவும்.
பொன்னிறமாக ஆகும் வரை வதக்கி சிறிது நேரம் கழித்து கொத்தமல்லித் தழை தூவிப் பரிமாறவும். சுவையான சின்ன உருளைக்கிழங்கு வறுவல் தயார்.