Usage of sunscreen correctly list of dos and donts Tamil News : இந்தியாவில் கோடைக்காலம் பொதுவாக வெப்பம், மாசுபாடு, சூரிய வெளிப்பாடு, தூசி, அழுக்கு மற்றும் வியர்வை காரணமாக அதிகப்படியான சரும பிரச்சனைகளைச் சந்திக்க நேரிடுகிறது. தற்போதைய கோவிட்-19 தொற்றுநோயால், தொடர்ந்து மாஸ்க் அணிவது சூரிய ஒளியில் இருந்து கொஞ்சம் ஓய்வு பெற்றதாகத் தெரிகிறது. ஆனால், அதனால் உங்கள் வழக்கமான சன்ஸ்கிரீன் அளவை நீங்கள் தவிர்க்கலாம் என்று நினைத்துவிடாதீர்கள்!
தொடர்ச்சியான சூரிய ஒளி, தீர்வு பெற முடியாத சரும பிரச்சனைகளையும் ஏற்படுத்துவதற்கு வாய்ப்பு உண்டு. நீண்ட காலப் பின் விளைவுகளுடன், இது முதுமையினால் ஏற்படும் சரும பாதிப்புகள், முன்கூட்டிய சுருக்கங்கள், பேட்சி அல்லது ஒழுங்கற்ற தோல் தொனி மற்றும் சீரற்ற தோல் அமைப்பு ஆகியவற்றிற்குப் பங்களிக்கிறது. நீண்டகால வெளிப்பாடு குணப்படுத்துவது எளிதல்ல என்றாலும், ஆரம்பத்திலேயே இதனைத் தடுப்பதற்கு ஏற்பாடுகள் செய்ய அறிவுறுத்தப்படுகிறது.

அதிகப்படியான சன் டான் விளைவுகளைத் தடுக்க நீங்கள் என்ன செய்யலாம்?
செய்யவேண்டியவை : வருடத்தின் 365 நாட்களும் சன்ஸ்கிரீன் பயன்படுத்த மறக்காதீர்கள். UVA கதிர்கள், அதிகம் ஊடுருவக்கூடியவை மற்றும் மழை நாட்களில் கூட உங்கள் சருமத்திற்கு சேதம் விளைவிப்பது மட்டுமல்லாமல் ஹைபர்பிக்மென்டேஷனையும் ஏற்படுத்தும்.
செய்யக்கூடாதவை : பல சன்ஸ்கிரீன்களில் UVB ஃபில்ட்டர் மட்டுமே உள்ளது. ஆனால், உகந்த பாதுகாப்புக்கு உங்களுக்கு UVA மற்றும் UVB ஃபில்டர்கள் இரண்டும் தேவை. UVA கதிர்கள் சருமத்திற்கு அதிகபட்ச சேதத்தை ஏற்படுத்துகின்றன. அதனால், இரண்டும் இருப்பதுபோன்ற சன்ஸ்க்ரீனை தேர்ந்தெடுங்கள்.
செய்யவேண்டியவை : முகம், கழுத்து, காதுகள், கைகள் மற்றும் கால்கள் உட்பட சூரிய ஒளியில் படக்கூடிய உறுப்புகளில் தாராளமாக சன்ஸ்கிரீனைப் பயன்படுத்துங்கள். உங்கள் காரில் அல்லது வேலையில் அமர்ந்திருக்கும்போது சன்ஸ்கிரீன் போட்டுக்கொள்வதை ஒரு பழக்கமாக்கிக் கொள்ளுங்கள். ஏனென்றால், சூரியக் கதிர்கள் கண்ணாடி மற்றும் ஜன்னல்கள் வழியாகச் சென்று உங்கள் சருமத்தை சேதப்படுத்தும்.
செய்யக்கூடாதவை : காலாவதியான சன்ஸ்கிரீன் பயன்படுத்துவதைத் தவிர்க்கவும். இந்தத் தயாரிப்பு செயல்திறனை இழக்கும் மற்றும் சூரிய ஒளியில் எந்த விளைவையும் ஏற்படுத்தாது.
செய்யவேண்டியவை : நிறைய சன்ஸ்கிரீன் பயன்படுத்தவும். நீங்கள் ஆரம்பத்தில் அதனைப் பயன்படுத்தும்போது அது சருமத்தில் ஒட்டிக்கொண்டிருப்பதை உணரலாம். ஆனால், சருமத்தில் உறிஞ்சுவதற்குச் சிறிது நேரம் கொடுங்கள்.
செய்யக்கூடாதவை : டேனிங் தயாரிப்புகளைத் தவிர்க்கவும். முதன்முறையாக டேனிங் செய்துகொள்பவர்கள் 20 நிமிடங்கள் செய்ய முடியும் மற்றும் ஒவ்வொரு முறையும் 5-10 நிமிடங்கள் அதிகரிக்கலாம். 1.5 முதல் 2 மணி நேரத்திற்கு மேல் வெயிலில் இருக்க வேண்டாம்.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil