ஆச்சர்யம் தரும் சுண்டைக்காய் மருத்துவ குணங்கள்!

author-image
WebDesk
புதுப்பிக்கப்பட்டது
New Update
சுண்டைக்காய்

சுண்டைக்காய்

போடா சுண்டக்கா.. என்றுச் சொல்வது வழக்கம்.  உருவத்தில் சிறியோரையும், வலிமையற்றவரையும் இவ்வாறாக சில சமயம் கூறுவதுண்டு. ஆனால் சுண்டைக்காயில் எவ்வளவு பலன்கள் இருக்கிறது என தெரிந்தால், அவர்கள் அப்படிச் சொல்லமாட்டார்கள்.

Advertisment

காய்கறிகளுள் மிகவும் சிறிதான இந்த சுண்டைக்காயை நுண் ஊட்டச் சத்துக்களின் சேமிப்புக் கிடங்கு என்றுகூட சொல்லலாம். உடலிலுள்ள கிருமிகளை அழிப்பதிலிருந்து கொழுப்பைக் கரைப்பதுவரை பெரிய வேலைகளைச் செய்யக்கூடிய மாபெரும் மருத்துவ குணங்களை உள்ளடக்கியது இது.

சுண்டைக்காயின் குணங்கள்:

ரத்த அழுத்தத்தைக் கட்டுப்படுத்தக் கூடியது. ரத்தத்தில் கொழுப்பு சேர்ந்து, அது ரத்தக் குழாய்களில் படிவதைத் தவிர்க்கும் சக்தி இதற்கு உண்டு. ஆன்டி இன்ஃப்ளமேட்டரி குணங்கள் கொண்டது. வெள்ளை ரத்த அணுக்களை அதிகரித்து அதன் விளைவாக நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கக்கூடியது.

இதில் உள்ள இரும்புச் சத்தானது ரத்த சோகையை எதிர்த்து போராடக்கூடியது. இரும்புச் சத்து என்றதும், கேழ்வரகு, கீரை போன்றவற்றையே நாடுவோருக்கு சுண்டைக்காயில் அது அதிகம் உள்ளது என்பது புதிய விஷயமாகும்.

Advertisment
Advertisements

காய்ச்சல் நேரத்தில் சுண்டைக்காயை சேர்த்துக்கொள்வதன் மூலம் வெள்ளை ரத்த அணுக்களை அதிகரிப்பதுடன் , காயங்களையும், புண்களையும் ஆற வைக்கும்.

நரம்பு மண்டலத்துக்கு சக்தி கொடுக்ககூடியது. பார்வைத்திறன் அதிகரிக்கவும், நினைவாற்றல் கூடவும், இது உதவும்.

பிரசவமான பெண்களுக்கு பத்திய சாப்பாட்டின் ஒரு பகுதியாக ‘அங்காயப் பொடி’ என ஒன்று கொடுப்பார்கள். அதில் பிரதானமக சேர்கக்ப்படுவதே சுண்டைக்காய்தான்.

தாய்ப்பால் சுரப்பை அதிகரித்து, செரிமான சக்தியைத் தூண்டி , உடலின் நச்சுகளை வெளியேற்றும் சக்தி கொண்டது.

உணவின் மூலம் நம் உடலுக்குள்சேர்கிற கிருமிகள் அமைதியாக உள்ளே பல்வித பாதிப்புகளை உருவாக்கலாம். அடிக்கடி சுண்டைக்காய் சாப்பிடுகிறவர்களுக்கு இந்த நச்சுக் கிருமிகள் உடலில் தங்குவது தவிர்க்கப்படும்.

சுண்டைக்காயை உலர்த்திப் பொடியாக்கி தினம் சிறிதளவு தண்ணீரில் கரைத்துக் குடித்து வந்தால், ஆசனவாய்த் தொற்றும், அதன் விளைவாக உண்டாகிற அரிப்பும் குணமாகும்.

வாரத்தில் 4 நாட்களுக்கு சுண்டைக்காய் சாப்பிடுகிறவர்களுக்கு, ரத்த சர்க்கரை கட்டுப்பாட்டில் இருக்கும்.

சுண்டைக்காயைக் காய வைத்து, வற்றலாக்கி, சில துளிகள் எண்ணெய் விட்டு, வறுத்து சூடான சாதத்தில், பொடித்துச் சேர்த்து, ஒரு கவளம் சாப்பிட அஜீரணக் கோளாறுகள் குணமாகும்.

வாயுப் பிடிப்பு பிரச்சனை உள்ளவர்களுக்கும் சுண்டைக்காய் நல்ல மருந்து.

பச்சை சுண்டைக்காயை அடிக்கடி எடுத்துக்கொள்வதன் மூலம் எலும்புகள் பலப்படும்.

Lifestyle Food Recipes

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us: