கோல மாவுடன் இந்த 2 பொருள் சேர்த்து யூஸ் பண்ணுங்க… பாத்ரூம் பளிச்சென மாறும்!
நம்ம வீட்ல இருக்குற பாத்ரூம், பல வருஷங்களா பயன்படுத்திட்டு இருந்தா, கண்டிப்பா அழுக்கு, மஞ்சள் கரை படிஞ்சு, ஒரு மாதிரி பழையசா தெரியும். ஆனா, புதுசுபோல சுத்தமா மாறுவதற்கு நம்ம வீட்லயே இருக்குற சில பொருட்களை வெச்சே சூப்பர் டிப்ஸ் இந்தப் பதிவில் பாக்கலாம்.

Advertisment
டாய்லெட்டைப் பளிச்சென்று மாற்றும் ரகசியம்:
ஒரு பாத்ரூம் கிளீனிங் பவுல் எடுத்துக்கோங்க அதுல, சபினா பவுடர் 4 டீஸ்பூன், டிடர்ஜென்ட் பவுடர் (சர்ப் எக்ஸல்) 1 டீஸ்பூன் (அதிகமா போட்டா வழுவழுன்னு இருக்கும், தண்ணி நிறைய செலவாகும்), கோலப்பொடி 4 டீஸ்பூன் (இதுதான் ஸ்க்ரப்பர் மாதிரி செயல்பட்டு, கரைகளை நீக்கும்!). இந்த மூணையும் நல்லா கலந்துக்கோங்க. அப்புறம், இதை டாய்லெட் ஃபுல்லா, குறிப்பா அதிகமா அழுக்கு படிஞ்சிருக்க இடங்கள்ல நல்லா தூவி விடுங்க. மஞ்சள் கறை, பாசி, எந்த அழுக்கா இருந்தாலும், நொடிப் பொழுதுல வேலை செய்யும்.
பொடியைத் தூவின பிறகு, கொஞ்சமா ஹார்பிக் ஊத்தி, 10 நிமிஷம் அப்படியே ஊற விடுங்க. எந்தப் பொருளை வச்சு கழுவுனாலும், கொஞ்சம் ஊற வச்சு கழுவுனாத் தான் சூப்பரா சுத்தமாகும். ஹார்பிக் ஊத்தினதுக்கு அப்புறம், ஒரு பிரஷ்ஷை வச்சு லைட்டா தேச்சு விடுங்க. அப்புறம், 10 நிமிஷம் கழிச்சு நல்லா தண்ணி ஊத்தி கழுவி விட்டா, உங்க டாய்லெட் புதுசு போல பளபளன்னு மின்னும்!
Advertisment
Advertisements
குழந்தைங்க வெளியில விளையாடிட்டு வந்ததும், காலை கழுவும்போது டாய்லெட்டை நல்லா அலசாம அப்படியே ஓடிடுவாங்க. இதனாலதான் டாய்லெட்ல அழுக்கு சேருது. குழந்தைங்க வெளியில போயிட்டு வந்தா, கால்களை நல்லா தண்ணி ஊத்தி கழுவச் சொல்லுங்க. இது பழக்கமா மாறினா, டாய்லெட்டை சுத்தமா வச்சிக்கிறது ரொம்ப ஈஸி. பாத்ரூம் எப்பவும் வாசனையா இருக்கணுமா? ஹார்பிக் வாசம் எல்லாருக்கும் பிடிக்காது இல்லையா? கொஞ்சமா கம்ஃபர்ட் (துணி அலசும் திரவம்) எடுத்து, தண்ணில கலந்து ஒரு பக்கெட் ஃபுல்லா தண்ணி பிடிச்சுக்கோங்க. அப்புறம், இந்த தண்ணியை டாய்லெட் ஃபுல்லா தெளிச்சு விடுங்க. 24 மணி நேரமும் உங்க பாத்ரூம் நல்லா வாசனையா இருக்கும்! தினமும் ஒரு தடவை இப்படி செஞ்சா போதும்.