/indian-express-tamil/media/media_files/2025/06/27/home-remedy-for-skin-diseasect-2025-06-27-18-53-22.jpg)
வெற்றிலையுடன் பூண்டு சேர்த்து இப்படி யூஸ் பண்ணுங்க… தேமல் சில நாட்களிலே மறையும்; டாக்டர் மைதிலி
சருமத்தில் ஏற்படும் தேமல் ஒரு பொதுவான பிரச்னையாகும். பலருக்கும் சங்கடத்தை ஏற்படுத்தும் இந்த தேமல் பிரச்னையை இயற்கையான முறையில், வீட்டிலேயே கிடைக்கும் பொருட்களைக் கொண்டு எப்படி குணப்படுத்துவது என்று டாக்டர் மைதிலி எளிய தீர்வை வழங்கியுள்ளார்.
தேவையான பொருட்கள்: வெற்றிலை பெரிய இலையாக இருந்தால் ஒன்று, சிறிய இலையாக இருந்தால் (2), பூண்டு (3)
செய்முறை: வெற்றிலை மற்றும் பூண்டு இரண்டையும் அம்மியில் வைத்து நன்றாக இடித்து, நசுக்கி, அரைத்து கெட்டியான விழுது போல் எடுத்துக்கொள்ள வேண்டும். மிக்ஸியைப் பயன்படுத்துவதை தவிர்க்குமாறு டாக்டர் மைதிலி அறிவுறுத்துகிறார். உடம்பில் எந்தப் பகுதியில் தேமல் இருக்கிறதோ, அந்தப் பகுதியில் இந்த விழுதை எடுத்து, தேமலின் மேல் நன்கு பூசி, 2 முதல் 3 நிமிடங்கள் வரை மெதுவாகத் தேய்த்து மசாஜ் செய்ய வேண்டும். மசாஜ் செய்த பிறகு, அடுத்த 10 நிமிடங்கள் அப்படியே விட்டுவிட வேண்டும். 10 நிமிடங்களுக்குப் பிறகு, வெந்நீரைக் கொண்டு அந்தப் பகுதியை கழுவலாம். அல்லது, ஒரு துணியை வெந்நீரில் நனைத்து, அந்த ஈரத் துணியால் தேமல் இருக்கும் இடத்தைத் துடைத்து எடுக்கலாம்.
இந்த சிகிச்சையை தொடர்ச்சியாக 45 நாட்கள் செய்து வந்தால், தேமல் படிப்படியாகவும் இயற்கையாகவும் மறையத் தொடங்கும் என்று டாக்டர் மைதிலி உறுதியளிக்கிறார். நாளடைவில் தேமல் மறைவது கண்கூடாகத் தெரியும்.
பொறுப்பு துறப்பு: இந்தக் கட்டுரை பொது தளத்தில்/ நாங்கள் தொடர்பு கொண்டு பேசிய நிபுணர்களிடம் இருந்து பெறப்பட்ட தகவல் அடிப்படையில் எழுதப்பட்டுள்ளது. இக்கட்டுரையில் குறிப்பிட்டு இருப்பதை நீங்கள் கடைபிடிக்கும் முன், உங்கள் குடும்ப மருத்துவர் அல்லது உங்கள் உடல்நலப் பயிற்சியாளரை அணுகும்படி கேட்டுக் கொள்கிறோம்.
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.