வீட்டை பராமரிப்பது என்பது சவாலான காரியம். அதிலும், வாடகை வீட்டில் இருப்பவர்கள் இவற்றை செய்வது கூடுதல் சவாலாக இருக்கும். ஆனால், சில எளிமையான வழிமுறைகளை பின்பற்றுவதன் மூலம் நம் நேரத்தை மிச்சப்படுத்த முடியும். அவை என்னவென்று தற்போது நாம் காணலாம்.
பல வாடகை வீடுகளில் ஆணி அடிப்பதற்கு, அந்த வீட்டு உரிமையாளர்கள் அனுமதிப்பதில்லை. ஆனால், ஆணி அடிக்காமல் வீட்டில் இருக்கும் பொருட்களை மாட்டுவது மிக கடினமானது. அதற்கு தீர்வளிக்கும் விதமாக தற்போது கடைகளில் ஸ்டிக்கர்கள் கிடைக்கின்றன.
இவை நன்றாக எடை தாங்கக் கூடியதாக இருக்கும். இவற்றை வாங்கி நாம் பயன்படுத்தலாம். இந்த ஸ்டிக்கர்களை சுவற்றில் ஒட்டிவிட்டு, அதில் புகைப்பட ஃப்ரேம்கள் மற்றும் நமக்கு தேவையான பொருட்களை மாட்டிக் கொள்ளலாம்.
/indian-express-tamil/media/media_files/2025/01/18/tyqpfQp459RXgdnQe4Ry.png)
மேலும், ஆணி அடிக்காமல் வீட்டின் கதவுப் பகுதியில் கர்டன்களையும் சுலபமாக தொங்க விட முடியும். இதற்காக கடைகளில் டென்ஷன் ராட்கள் எனப்படும் ஸ்டைன்லெஸ் ஸ்டீல் கம்பிகள் கிடைக்கின்றன. இவற்றை கதவுப் பகுதியில் மாட்டி கர்டன்களை தொங்க விடலாம்.
/indian-express-tamil/media/media_files/2025/01/18/hk8UkkiO28tJnbyuvM1o.png)
இப்படி ஆணி அடிக்காமல் சில பொருட்களை வாங்கி பயன்படுத்துவதன் மூலம், வாடகை வீட்டில் இருப்பவர்கள் தங்கள் தேவை நிவர்த்தி செய்து கொள்ள முடியும்.