வீட்டு பராமரிப்பில் நாம் தெரிந்து கொள்ளக் கூடிய சில முக்கியமான டிப்ஸ் மற்றும் ட்ரிக்ஸ் குறித்து தற்போது காணலாம்.
பட்டு சேலைகளை அரிதாகவே நாம் பயன்படுத்துவோம். அதனால், பெரும்பாலான நேரத்தில் அவை பீரோக்களில் மடித்து வைத்த மாதிரியே இருக்கும். இப்படி நீண்ட நாட்களாக அவற்றை எடுக்காமல் இருந்தால் மடிப்பு இருக்கும் பகுதிகளில் சேதம் ஏற்படும். இதை தடுப்பதற்கு, பட்டு சேலைகளை அடிக்கடி மாற்று பக்கமாக மடித்து வைக்க வேண்டும். இப்படி செய்தால் சேலை சேதமடையாமல் இருக்கும்.
மேலும், நீண்ட நாட்களுக்கு பிறகு பட்டு சேலையை உடுத்தும் போது அவற்றில் இருந்து வரும் மனம் சிலருக்கு பிடிக்காது. இதை தடுக்க, ஒரு ஸ்ப்ரே பாட்டிலில் சிறிதளவு கம்ஃபோர்ட் மற்றும் ஷம்பூவுடன் தண்ணீர் சேர்த்து சேலைகளில் தெளிக்கலாம். இப்படி செய்தால் சேலையில் நல்ல மனம் வீசும்.
இதேபோல், பட்டு சேலைகளை அயன் செய்யும் போது, அயன் பாக்ஸை நேரடியாக சேலை மீது வைக்கக் கூடாது. அப்படி வைத்தால் அவை கருகி விடும் வாய்ப்பு இருக்கிறது. இதை தடுப்பதற்கு சேலை மீது ஒரு துப்பட்டா விரித்து அதன் மீது அயன் செய்யலாம். இதன் மூலம் சேலைக்கு சேதம் ஏற்படாமல் அயன் செய்ய முடியும்.
சமையல் வேலையில் சில நேரத்தில் தேங்காய் உடைப்பது நமக்கு சிரமமாக தோன்றும். பார்ப்பதற்கு எளிதாக தெரிந்தாலும் சில நேரத்தில் சரியான முறையில் தேங்காயை உடைக்க முடியாமல் திணற வேண்டிய சூழல் ஏற்படும். அந்த நேரத்தில், தேங்காயை தண்ணீரில் நனைத்துக் கொள்ள வேண்டும். அதன் பின்னர் தேங்காயை உடைத்தல் சீரான வட்ட வடிவத்தில் உடைந்து விடும்.