நம் அன்றாட கிட்சன் பணிகளை எளிதாக மாற்றும் சில சிம்பிளான டிப்ஸ்களை இதில் பார்க்கலாம்.
சில நேரங்களில் முட்டையை உடைக்கும் போது, அதன் ஓடு உடைந்து உள்ளே விழுந்து விடும். இதனை வெளியே எடுப்பதற்கு சிரமமாக இருக்கும். அந்த நேர்த்தில், விரலை லேசாக தண்ணீரில் நனைத்து, அந்த முட்டை ஓட்டின் மீது வைத்தால் அவை எளிதாக வெளியே வந்து விடும்.
கிட்சனில் இருக்கும் கடுகு டப்பா, சீரக டப்பா ஆகியவை டைட்டாக மூடி இருந்தால், அதை திறக்க மற்றவர்களின் உதவியை எதிர்பார்க்க வேண்டிய சூழல் உருவாகும். ஆனால், அதனை சுலபமாக நாமே திறந்து விடலாம். டப்பாவின் மூடியில் இரண்டு ரப்பர் பேண்டுகளை மாட்டிவிட்டு அதனை திறக்கலாம். இப்போது, அதை திறக்க எளிமையாக இருக்கும்.
வாழைப்பழங்கள் நிறைய வாங்கி வரும் போது, அவை சீக்கிரமாக பழுத்து அழுகி விடும். ஆனால், வாழைப்பழ காம்புகளில் சில்வர் ஃபாயில் பேப்பரை சுற்றி விட்டால், பழங்கள் விரைவாக அழுகி போவதை தடுக்க முடியும்.
ரேஷன் அரிசியை பயன்படுத்தும் போது சுமார் 4 அல்லது 5 முறை கழுவினால் மட்டுமே, அதில் இருந்து அழுக்குகளை அகற்ற முடியும். இதற்கு சிரமமாக இருக்கும். இதை எளிதாக்க ரேஷன் அரிசியுடன் ஒரு ஸ்பூன் கல் உப்பு சேர்த்து கழுவலாம். இவ்வாறு செய்தால், ரேஷன் அரிசியை இரண்டு முறை கழுவினாலே போதுமானதாக இருக்கும்.