பலருக்கு நாள் முழுவதும் கிட்சனில் இருக்கும் பணிகளை மேற்கொள்வதற்கே நேரம் சரியாக இருக்கும். அவர்களால் மற்ற வேலைகளில் தங்கள் கவனத்தை செலுத்த முடியாது. அப்படி இருக்கும் போது கிட்சன் வேலைகளை எளிமையாக முடித்து விட்டால் நேரம் மிச்சமாகும். அப்படி நேரத்தை மிச்சப்படுத்தும் சில உபயோகமான டிப்ஸ்கள் குறித்து இப்பதிவில் நாம் பார்க்கலாம்.
நாம் கடையில் இருந்து வாங்கும் நெய் பாட்டிலில் எப்படியும் கொஞ்சம் நெய் மீதமிருக்கும். அவற்றை முற்றிலும் எடுத்து பயன்படுத்துவது என்பது மிகவும் சிரமமான காரியம். ஆனால், அதனை மிக எளிமையாக மாற்ற முடியும். அடுப்பில் ஒரு பாத்திரத்தை வைத்து நடுவே ஒரு மரக்கரண்டியை வைத்துவிட வேண்டும்.
இப்போது காலியாக இருக்கும் நெய் பாட்டிலை தலைகீழாக மரக்கரண்டியின் மீது வைத்து அடுப்பை ஆன் செய்து விடலாம். இதன் வெப்பத்தில் பாட்டிலில் இருக்கும் நெய் முற்றிலும் உருகி பாத்திரத்திற்கு மாறி விடும். இதன் மூலம் நெய் வீணாவதை தடுக்க முடியும்.
இதேபோல் சர்க்கரை, மாவு போன்ற பொருள்களை பாட்டிலில் போட்டு விட்டு, அந்த பாட்டிலுக்குள் ஒரு ஸ்பூன் வைத்தால், பாட்டிலை முழுவதுமாக மூட முடியாது. இந்த சூழலில் ஸ்பூனை தலைகீழாக பாட்டிலுக்குள் வைத்தால், பாட்டிலை எளிமையாக மூடி விடலாம்.