நம் அன்றாட பணிகளை செய்யும் போது அவற்றை எளிமையாகவும், திறம்படவும் முடிப்பது எப்படி என யோசிப்போம். அந்த வகையில் நமக்கு தேவையான சில பயனுள்ள டிப்ஸை தற்போது காண்போம்.
Advertisment
நம் வீட்டில் கண்ணாடி போன்ற பாலிதீன் கவர் நிறைய இருக்கும். இவற்றை பெரும்பாலும் குப்பையில் தான் வீசுவோம். ஆனால், இதன் மூலம் ஒரு பயனுள்ள வேலையை செய்ய முடியும். இந்த பாலிதீன் கவரை வட்ட வடிவமாக வெட்டி எடுத்துக் கொள்ள வேண்டும். இப்போது, நாம் மதிய உணவிற்காக எடுத்துச் செல்லும் குழம்பு டப்பா மீது இந்த வெட்டி எடுத்த பாலிதீன் கவரை போட்டு அதன் பின்னர் மூடி விடலாம். இதன் மூலம் குழம்பு வெளியே சிந்துவதை தடுக்க முடியும்.
வீட்டில் பூஜை செய்யும் போது பத்தியை பெரும்பாலும் வாழைப்பழம் மீது குத்தி வைத்திருப்போம். அதன் பின்னர், அந்த பழத்தை பயன்படுத்த முடியாது. இதனை தவிர்க்க ஒரு சிம்பிளான டிப்ஸ் உள்ளது. வீட்டில் இருக்கும் மெழுகுவர்த்தியின் அடிப்பகுதியை சிறியதாக வெட்டி, அதன் மீது பத்தியை குத்தி வைக்கலாம். இதனால் பழம் வீணாவது தடுக்கப்படும்.
ஒரு தட்டில் இரண்டு ஸ்பூன் உப்பு மற்றும் கால் ஸ்பூன் பேக்கிங் சோடா சேர்த்து நன்றாக கலக்க வேண்டும். இதனை, கடையில் இருந்து வாங்கி வந்த உருளைக் கிழங்கு மீது நன்றாக தடவ வேண்டும். இப்படி செய்தால் இரண்டு வாரங்கள் ஆனாலும் உருளைக் கிழங்கு கெட்டுப்போகாமல் இருக்கும்.
Advertisment
Advertisements
நம் வீட்டில் பாத்திரம் கழுவுவதற்கு பயன்படும் சோப் விரைவாகவே காலியாகி விடும். இதனையும் எளிமையாக தடுக்க முடியும். இந்த சோப்பை கேரட் போன்று கொஞ்சமாக துருவி எடுத்துக் கொள்ள வேண்டும். இவ்வாறு துருவிய சோப்பை ஒரு பாத்திரத்தில் போட்டு, அதில் இரண்டு ஸ்பூன் அளவிற்கு தண்ணீர் ஊற்றிக் கொள்ள வேண்டும்.
இதனை அடுப்பில் வைத்து நன்றாக சூடுபடுத்த வேண்டும். இதில் சோப் கரையும் போது, கூடுதலாக இரண்டு ஸ்பூன் தண்ணீர் சேர்க்க வேண்டும். பின்னர் இதை அடுப்பில் இருந்து இறக்கி விடலாம். இந்த சோப் ஆறியதும், அதில் இரண்டு ஸ்பூன் கோதுமை மாவு, உப்பு, அரை ஸ்பூன் பேக்கிங் சோடா, ஒரு ஸ்பூன் லெமன் சால்ட் ஆகிய அனைத்தையும் சேர்த்து நன்றாக கலக்க வேண்டும்.
இறுதியாக, இந்தக் கலவையை வெயிலில் காய வைத்தால் கெட்டியாக மாறிவிடும். இதனைக் கொண்டு பாத்திரங்கள் கழுவினால் அவை கூடுதல் சுத்தமாக இருப்பதுடன், சோப்பும் அதிகமாக கரையாமல் இருக்கும்.