வீட்டு பராமரிப்பை எளிமையாக மாற்றுவதற்கான டிப்ஸ் மற்றும் ட்ரிக்ஸை இணையத்தில் அடிக்கடி தேடி இருப்போம். அந்த வகையில் சில பயனுள்ள டிப்ஸை தற்போது காணலாம்.
வீட்டில் நாம் நீண்ட நாட்களாக பயன்படுத்தும் பக்கெட்டில் உப்புக் கரை அதிகமாக இருந்தால், அவற்றை எப்படி எளிதாக அகற்றுவது என தற்போது பார்க்கலாம். ஒரு சிறிய பாத்திரத்தில் கொஞ்சமாக உப்பு எடுத்துக் கொள்ள வேண்டும். இத்துடன் சிறிதளவு வினிகர் சேர்த்து நன்றாக கலக்க வேண்டும்.
இந்தக் கலவையை ஒரு ஸ்க்ரப்பர் கொண்டு உப்புக் கரை அதிகமாக இருக்கும் பக்கெட்டை தேய்த்துக் கழுவ வேண்டும். இவ்வாறு செய்தால் உப்புக் கரைகள் நீங்கி, பக்கெட் பார்ப்பதற்கு புதியது போன்று மாறிவிடும். இதன் பின்னர், ஒரு துணி கொண்டு பக்கெட்டின் வெளிப்புறத்தை துடைத்து எடுக்க வேண்டும். இறுதியாக பக்கெட் மீது சிறிதளவு தேங்காய் எண்ணெய் தேய்க்க வேண்டும். இது மேலும் உப்புக் கரை பரவுவதை தடுக்கும்.
பயணங்கள் மேற்கொள்ளும் போது, கத்திரியை நம் பைகளில் எடுத்துச் செல்வோம். அவை கூர்மையாக இருப்பதனால் பைகளில் இருக்கும் மற்ற பொருட்களை சேதப்படுத்தும் வாய்ப்பு அதிகம். இதை தடுக்க நாம் பயன்படுத்திய பழைய பேனாவின் மூடி இருந்தாலே போதும். இந்த பேனா மூடியை கொண்டு கத்திரியின் மேற்பகுதியை மூடி வைக்கலாம். இப்படி செய்தால் மற்ற பொருட்கள் சேதமாகாது.
கிட்சனில் பயன்படுத்தும் காய்கறி துருவிகள், கத்தி ஆகியவை கூர்மையாக இல்லாமல் இருக்கும். அப்படி இருக்கும் போது, வீட்டில் இருக்கும் அகல் விளக்கின் மேற்புறத்தை கொண்டு காய்கறி துருவி மற்றும் கத்தி மீது தேய்க்க வேண்டும். இப்படி செய்தால் அவை நன்றாக கூர்மையாகி விடும்.