வீட்டை பராமரிப்பது என்பது சவாலான காரியம். குறிப்பாக, கிட்சனை சுத்தமாக வைத்திருப்பது என்பது மிகக் கடினமான ஒன்று. ஆனால், சில எளிமையான வழிமுறைகளை பின்பற்றுவதன் மூலம் நம் நேரத்தை மிச்சப்படுத்த முடியும். அவை என்னவென்று தற்போது நாம் காணலாம்.
Advertisment
இஞ்சியின் தோலை சீவி விட்டு பெரும்பாலும் அவற்றை குப்பையில் தான் போடுவோம். ஆனால், அவற்றை தண்ணீர் சேர்த்து மிக்ஸியில் அரைத்து எடுத்துக் கொள்ளலாம். பின்னர், இதனை வடிகட்டி அதன் தண்ணீரை மட்டும் தனியாக பிரித்து எடுக்க வேண்டும். இந்த நீரை செடிகள் மீது தெளித்தால் பூச்சிகள் வராமல் இருக்கும். மேலும், கிட்சனில் இதனை தெளித்தாலும் பல்லி, கரப்பான் பூச்சிகள் தொல்லை இல்லாமல் இருக்கும்.
சமையலுக்கு தினந்தோறும் பயன்படுத்தும் கடாய், பார்ப்பதற்கு கரி பிடித்து காணப்படும். இதனையும் எளிமையாக அகற்ற முடியும். இதற்காக அடுப்பில் ஒரு பாத்திரம் வைத்து அதில் தண்ணீர் ஊற்றி கொதிக்க வைக்க வேண்டும். இதில், ஒரு ஸ்பூன் துணி துவைக்க பயன்படும் பௌடர், இரண்டு எலுமிச்சை தோல், ஆகியவற்றை சேர்த்து கலக்க வேண்டும்.
இந்த கொதிக்கும் தண்ணீரில், கரி பிடித்த கடாயை 5 நிமிடங்கள் ஊற வைத்து பின்னர் வெளியே எடுக்க வேண்டும். இப்போது கடைகளில் கிடைக்கும் சாண்ட் பேப்பர் எனப்படும் உப்பு காகிதம் வாங்கி, சிறிய துண்டாக கிழித்து இந்தக் கடாயை துடைக்க வேண்டும். இப்படி செய்தால் கடாயில் இருக்கும் கரி நீங்கி விடும்.