பல வருட பாத்ரூம் கறை... 10 நிமிசத்தில் பளீச்; வெறும் 3 ரூபாய் போதும்: இப்படி செஞ்சு பாருங்க!
பல ஆண்டுகளாக கழிப்பறையில் படிந்து இருக்கும் உப்புக் கறைகளை எவ்வாறு சுலபமான முறையில் சுத்தம் செய்வது என்று இந்த செய்திக் குறிப்பில் பார்க்கலாம். கழிப்பறையை சுத்தமாக வைத்திருந்தால், ஆரோக்கியத்திற்கு தீங்கு ஏற்படாமல் இருக்கும்.
பல ஆண்டுகளாக கழிப்பறையில் படிந்து இருக்கும் உப்புக் கறைகளை எவ்வாறு சுலபமான முறையில் சுத்தம் செய்வது என்று இந்த செய்திக் குறிப்பில் பார்க்கலாம். கழிப்பறையை சுத்தமாக வைத்திருந்தால், ஆரோக்கியத்திற்கு தீங்கு ஏற்படாமல் இருக்கும்.
வீட்டை சுத்தமாக பராமரிப்பது என்பது கழிப்பறையையும் உள்ளடக்கியது. குறிப்பாக, கழிப்பறையை எந்த அளவிற்கு சுத்தமாக வைத்திருக்கிறோமோ அந்த அளவிற்கு நோய் தொற்றுகளில் இருந்து நம்மை தற்காத்துக் கொண்டு ஆரோக்கியமாக வாழ முடியும்.
Advertisment
அதன்படி, கழிப்பறையில் படிந்து இருக்கும் உப்புக் கறைகளை அகற்றி எவ்வாறு தூய்மையாக பராமரிப்பது என்று தற்போது காணலாம். ஒரு பிளாஸ்டிக் கப்பில் இரண்டு ஸ்பூன் அளவிற்கு சீவக்காய் பொடியை எடுத்துக் கொள்ள வேண்டும். இத்துடன் ஒரு ரூபாய் ஷாம்பூ பக்கெட்டை முற்றிலும் ஊற்றி கலக்க வேண்டும். இவற்றுடன் ஒரு ஸ்பூன் புளித்த தயிரையும் சேர்த்து பசை பதத்திற்கு மீண்டும் கலக்க வேண்டும்.
இப்போது கைகளில் கிளவுஸ் மாட்டிக் கொள்ள வேண்டும். வீட்டில் கிளவுஸ் இல்லாதவர்கள், ஒரு பிளாஸ்டிக் பையை இறுக்கமாக கட்டிக் கொள்ளலாம். நாம் தயாரித்து வைத்திருக்கும் கலவையை ஒரு ஸ்க்ரப்பரில் தடவி, கழிப்பறையில் உப்புக் கறை படிந்து இருக்கும் டைல்ஸ்களில் தேய்க்க வேண்டும். இதற்காக கை வலிக்கும் அளவிற்கு அழுத்தம் கொடுத்து தேய்க்க வேண்டாம். லேசான அழுத்தத்துடன் தேய்த்தாலே போதுமானதாக இருக்கும்.
இவ்வாறு தேய்த்த பின்னர் டைல்ஸ் முழுவதும் தண்ணீர் ஊற்றி கழுவி விடலாம். இப்போது டைல்ஸ்களை பார்ப்பதற்கு புதியது போன்று காட்சியளிக்கும். அந்த அளவிற்கு பளிச்சென சுத்தமாகி இருக்கும். டைல்ஸ்கள் மட்டுமல்லாமல் கழிப்பறையின் சுவர் பகுதிகளிலும் இந்தக் கரைசல் கொண்டு கழுவலாம். அதில் இருக்கும் உப்புக் கறையும் முற்றிலும் நீங்கி விடும்.
Advertisment
Advertisements
இரண்டு ரூபாய் சீவக்காய் பாக்கெட் மற்றும் ஒரு ரூபாய் ஷம்பூ மூலமாக நம் வீட்டில் இருக்கும் கழிப்பறையை இந்த அளவிற்கு சுத்தமாக வைத்திருக்க முடியும்.