scorecardresearch

கெட்டியான, கீரிமியான தயிர் வேண்டுமா? வீட்டிலேயே செய்யலாம்.. எளிய குறிப்புகள் இதோ!

கெட்டியான, கீரிமியான தயிரை வீட்டிலேயே எளிதாக செய்யலாம். அதற்கு, சரியான பாத்திரம், பாலின் வெப்பநிலை மற்றும் அதை எப்படி சேமிப்பது என்பதை நீங்கள் அறிந்து கொள்ள வேண்டும்.

yogurt
Useful tips to make thick and creamy curd at home in tamil

தயிர் சுவைக்கு மட்டுமல்ல, ஆரோக்கியத்திற்கும் மிகவும் நல்லது. தயிர் சாப்பிட்டால் வயிறு பிரச்சனைகள் வராது. தயிர் உங்கள் உடலுக்கு புரதம் மற்றும் பல ஊட்டச்சத்துக்களை வழங்குகிறது.

வீட்டில் நீங்களே செய்யும் தயிருக்கு சுவை அதிகம். வீட்டில் தயாரிக்கப்பட்ட தயிர் அதிக கிரீம் மற்றும் ஃபிரெஷாக இருக்கும்.

ஆனால் பலருக்கு வீட்டில் எப்படி தயிர் செய்வது என்று தெரியாது. பல பெண்கள் தங்கள் தயிர், சந்தையில் கிடைப்பது போல கெட்டியாக உறையவில்லை என்று புகார் கூறுகிறார்கள். தயிர் தயாரிப்பது ஒன்றும் கடினமான காரியம் இல்லை, அதற்கான சில நுணுக்கங்களை நீங்கள் தெரிந்து கொள்ள வேண்டும்.

வீட்டிலேயே எளிதாக ”கிரிமீ தயிர்” செய்யக்கூடிய டிப்ஸ்களை இன்று நாங்கள் உங்களுக்கு கூறுகிறோம்.

வீட்டில் தயிர் தயாரிக்க, முதலில் முழு கிரீம் பால் (full cream milk) அவசியம். இது தயிரை கிரீமியாக மாற்றும்.

இரண்டாவது தயிர் செட்டாக சரியான பாத்திரம் வேண்டும். வீட்டில் மண் பானை இருந்தால், அதில் தயிர் சேமித்து வைக்கவும்.

தயிர் செய்ய முதலில் பாலை நன்றாக சூடாக்கவும். பிறகு சிறிது நேரம் அடிக்கவும். இப்போது நுரை வந்த பிறகு, தயிர் சேமிக்கும் பாத்திரத்தில் பாலை ஊற்றவும்.

தயிர் தயாரிக்க, நீங்கள் பருவத்திற்கு ஏற்ப பாலின் வெப்பநிலையை வைத்திருக்க வேண்டும். உதாரணமாக, நீங்கள் கோடையில் தயிர் தயாரிக்கும் போது, பால் சற்று சூடாக இருக்க வேண்டும்.

நீங்கள் குளிர்காலத்தில் தயிர் தயாரிக்கும் போது, பாலை சிறிது சூடாக எடுத்துக் கொள்ள வேண்டும். குளிரில், தயிரை ஒரு வெதுவெதுப்பான இடத்தில் வைக்க வேண்டும்.

பாத்திரத்தில் பாலை ஊற்றி, அதில் ஒரு ஸ்பூன் தயிர் சேர்த்து, நன்கு கலக்கவும்.

இப்போது பாத்திரத்தை நகர்த்தாமல் சுமார் 6-7 மணி நேரம் விட்டு விடுங்கள்.

கோடையில் தயிர் செட் ஆக 6 முதல் 7 மணி நேரம் ஆகும். அதே நேரத்தில், குளிர்காலத்தில் தயிர் செட் ஆக, 10 முதல் 12 மணிநேரம் தேவைப்படுகிறது.

தயிர் உறைந்த பிறகு, அதை ஃப்ரிட்ஜில் வைக்கவும். பிறகு, ஆறியதும் பயன்படுத்தவும். இது உங்கள் தயிரை கெட்டியாகவும், இனிமையாகவும் மாற்றும்.

“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news download Indian Express Tamil App.

Web Title: Useful tips to make thick and creamy curd at home in tamil