பால் திரியும் போது புளிப்பாக மாறும், அதை பன்னீர் செய்ய பயன்படுத்தலாம். பதப்படுத்தப்படாத தன்மையாலும், வீட்டிலேயே தயாரிக்கப்படுவதாலும் இந்த பன்னீர் ஆரோக்கியத்திற்கு சிறந்ததாக கருதப்படுகிறது. ஆனால் திடமான பகுதியை வெளியே எடுத்தபிறகு, எஞ்சியிருக்கும் தண்ணீரை என்ன செய்வது? பெரும்பாலான மக்கள் அதைத் தூக்கி எறிந்து விடுகிறார்கள்,
ஆனால், அதைச் செய்வதற்குப் பதிலாக, சில எளிதான வழிகளை அறிந்து கொள்ளுங்கள். இதன் மூலம் நீங்கள் எஞ்சிய தண்ணீரை வேறு வழியிலும் பயன்படுத்தலாம்.
மாவு பிசைவதற்கு
பொதுவாக, ரொட்டி, சப்பாத்தி செய்ய மாவை பிசையும் போது, மக்கள் சாதாரண தண்ணீரையே பயன்படுத்துவார்கள். ஆனால் அதற்கு பதிலாக இப்போது நீங்கள் மாவு பிசைவதற்கு, பால் திரிந்த தண்ணீரைப் பயன்படுத்தலாம். இதில் ஊட்டச்சத்தும் நிறைந்திருக்கிறது. அத்துடன், பால் தண்ணீர்’ உங்கள் ரொட்டியை வழக்கத்தை விட மென்மையாக்கும்.
காய்கறிகளை சமைக்கும் போது
காய்கறிகளுடன் குடும்பத்திற்கு ஆரோக்கியமான ஒன்றை சமைக்கும் போது, குழம்பு தயாரிப்பதற்கு இந்த தண்ணீரை பயன்படுத்தவும். இந்த நீர் உணவில் ஒரு குறிப்பிட்ட ஜிங்கை (zing) சேர்க்கும், மேலும் அதை மிகவும் ஆரோக்கியமானதாகவும் மாற்றும். பருப்பு மற்றும் தானியங்கள் சமைக்கும் போது, இந்த தண்ணீரையும் பயன்படுத்தலாம். இது உங்கள் உணவை சுவையாக மாற்றும்.
சாதம் தயாரிப்பதற்கு
பால் திரியும் போது போதுமான தண்ணீர் இருப்பதாக நீங்கள் நினைத்தால், அதை சாதம் தயாரிக்க பயன்படுத்தவும். இல்லையெனில், அதில் சிறிது சாதாரண தண்ணீரை சேர்க்கவும். இது சாதத்தின் சுவையை அதிகரிக்கும் மற்றும் புரதங்கள் உட்பட பல அத்தியாவசிய ஊட்டச்சத்துக்களை சேர்க்கும். அரிசியைத் தவிர, நூடுல்ஸை வேகவைக்கவும் இந்த தண்ணீரைப் பயன்படுத்தலாம்.
அடுத்த முறை பால் திரியும் அதை அப்புறப்படுத்த நினைக்கும் போது, இந்தக் குறிப்புகளை மனதில் கொள்ளுங்கள். பால் திரியும் போது, நீங்கள் அதை தேவையற்றதாக நினைக்க வேண்டாம். அதேபோல், தண்ணீரையும் வீசி விடக்கூடாது. ஏற்கனவே குறிப்பிட்டுள்ளபடி, இது உங்கள் உணவை அத்தியாவசிய ஊட்டச்சத்துக்களுடன், குறிப்பாக புரதங்கள் மற்றும் தாதுக்களுடன் முழுமையாக்கலாம். இது உங்கள் தசைகளை வலிமையாக்கும்.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil “