சக்தி + நோய்ப் பாதுகாப்பு + வீரியம் = கேரட்

ஆண்கள் கேரட் சாப்பிட்டால், அவர்களது விந்தணுவின் அளவு அதிகரிப்பதோடு, அதன் தரமும் அதிகரிக்கும்

கேரட்டின் வயது 5000 வருடங்கள் என்பது தெரியுமா? ஆரம்ப காலக் கேரட்டுகள் சிவப்பு, கறுப்பு, மஞ்சள், வெள்ளை அகியவற்றுடன், பெரும்பலும் ஊதா நிறத்திலும் இருந்தன. இப்போது இருக்கும் ஆரஞ்சு நிற கேரட்டுகள், போர்த்துக்கீசியர்களால் மத்திய நூற்றாண்டுகளில் உருவாக்கப்பட்டது. இன்றைய கால கட்டத்தில் இவைதான் பொதுவாக விளைவிக்கப்படுகிறன.

காயங்களுக்கு மருந்தாக

உடலில் ஏற்படும் சிறு காயங்கள், சிராய்ப்புகள் ஆகியனவற்றின் மேல் சீவிய அல்லது துருவிய கேரட் துண்டுகளை மேல் சிறிது நேரம் இருக்குமாறு செய்தால், சீக்கிரம் ஆறும். எரிச்சல் குறையும்.

சரும ஆரோக்கியத்திற்கு

கேரட்டிலுள்ள ஆன்டியாக்ஸிடண்ட், உடலில் வைட்டமின் A – வை உருவாக்கி, அதன் மூலம் சருமத்தை ஆரோக்கியமாக வைத்திருக்க உதவும்.

ஆண்கள் தினமும் கேரட்டைத் தவறாமல் சாப்பிட வேண்டும். ஏனெனில் கேரட்டை ஆண்கள் உணவில் அதிகம் சேர்த்துவந்தால், அவர்களுடைய உடல் நலத்துக்குப் பல நன்மைகள் கிடைக்கும். அந்தப் பலன்களைப் பார்க்கலாமா?

இரத்தத்தை சுத்தப்படுத்தும்

ஆண்கள் அவ்வப்போது இரத்தத்தைத் சுத்தப்படுத்த வேண்டியது அவசியம். அதற்கு வாரத்திற்கு 2 முறை கேரட்டை ஜூஸ் போட்டு குடிக்கலாம். இல்லாவிட்டால், தினமும் ஒரு கேரட் சாப்பிட்டு வரலாம்.

விந்தணுக்களை அதிகரிக்கும்

ஆண்கள் கேரட் சாப்பிட்டால், அவர்களது விந்தணுவின் அளவு அதிகரிப்பதோடு, அதன் தரமும் அதிகரிக்கும். எனவே குழந்தை பெற்றுக் கொள்ள நினைப்போர் தினமும் கேரட்டை தவறாமல் சேர்த்து வருவது நல்லது.

செரிமானம்

கேரட் செரிமானத்திற்கும் உதவும். ஆகவே செரிமான பிரச்சனையால் அவஸ்தைப்பட்டால், ஒரு நாளைக்கு இரண்டு கேரட்டை சாப்பிட்டு வந்தால், விரைவில் செரிமான பிரச்சனை நீங்கும்.

வயிற்றுக் கோளாறு

கேரட்டை ஆண்களும் சரி, பெண்களும் சரி தினமும் சாப்பிட்டு வந்தால், வயிற்றில் ஏற்படும் பிரச்சினைகள் குணமாகும். அதிலும் வாயுத் தொல்லை இருக்கும் போது, கேரட் சாப்பிட நீங்கும்.

கொலஸ்ட்ரால்

ஆண்கள் எப்போதுமே தங்களது உடலில் உள்ள கொலஸ்ட்ராலின் அளவை கட்டுப்பாட்டுடன் வைத்துக்கொள்ள வேண்டும். அதற்கு தினமும் இரவில் உணவு உண்ட பின்னர் ஒரு டம்ளர் கேரட் ஜூஸ் குடித்து வர, உடலில் உள்ள கொலஸ்ட்ராலின் அளவானது கட்டுப்பாட்டுடன் இருக்கும்.

ஆரோக்கியமான கண்கள்

கேரட் சாப்பிட்டால், கண்களில் ஏற்படும் பிரச்சனைகளைப் போக்கலாம் என்பது அனைவருக்கும் தெரிந்ததுதான்.

இதயத்தை ஆரோக்கியமாக வைக்கும்

கேரட் சாப்பிட்டால், கொலஸ்ட்ராலின் அளவானது குறைந்து, இதயத்திற்கு எந்த ஒரு பாதிப்பும் ஏற்படாமல் பாதுகாக்கும்.

பல் பராமரிப்பு

கேரட்டை சாப்பிட்டு வந்தால், பற்களில் ஏற்படும் அனைத்து பிரச்சனைகளையும் தடுக்கலாம். அதிலும் குறிப்பாக ஈறுகளில் ஏற்படும் பிரச்சனைகள் மற்றும் வாய் துர்நாற்றத்தில் இருந்து விடுபடலாம் என்று நிபுணர்கள் கூறுகின்றனர்.

வலியுடைய மூட்டு வீக்கம்

ஆண்களும் சரி, பெண்களும் சரி, இருவரும் சந்திக்கும் பிரச்சனைகளில் ஒன்று தான் வலியுடன் கூடிய மூட்டு வீக்கம். இத்தகைய மூட்டு வீக்கத்தில் இருந்து விலகி இருக்க வேண்டுமானால், தினமும் கேரட்டை தவறால் சாப்பிட்டு வர வேண்டும். இதானல் அதில் உள்ள வைட்டமின் சி, எலும்புகளை வலுவாக்கும்.

நோயெதிர்ப்பு சக்தியை வலுவாக்கும்

நோயெதிர்ப்பு சக்தி குறைவாக இருந்தால்தான் எளிதில் நோய்களானது தொற்றிக்கொள்ளும். ஆகவே எப்போதும் ஆரோக்கியமாக இருக்க வேண்டுமானால், கேரட்டை சாப்பிடுங்கள். இது நோயெதிர்ப்பு சக்தியை வலுவானதாக மாற்றும்.

நீரிழிவு

நீரிழிவு இருக்கும்போது கேரட்டைப் பச்சையாகச் சாப்பிட்டுவருவது, இன்சுலினைச் சீராக வைத்துக் கொள்ள உதவும்.

மலச்சிக்கல்

குடலியக்கம் சீராக செயல்பட்டு, மலச்சிக்கல் ஏற்படாமல் இருக்க வேண்டுமானால், தினமும் ஒரு கேரட் சாப்பிட்டு வாருங்கள்.

ரத்த அழுத்தம்

கேரட்டில் பொட்டாசியம் அதிகம் இருப்பதால், இது ரத்த அழுத்தத்தினைக் கட்டுப்பாட்டுடன் வைத்துக்கொள்ள உதவும்.

Get Tamil News and latest news update from India and around the world. Stay updated with today's latest Lifestyle news in Tamil.

×Close
×Close