தசைகளின் வளர்ச்சிக்கும், கூந்தல் வளர்ச்சிக்கும் புரதம் மிகவும் அவசியமான உணவு. அசைவ உணவு சாப்பிடுபவர்களுக்கு புரதம் மிக எளிதில் கிடைத்துவிடும். புரதம் நிறைந்த சைவ உணவுகளை நாம் தேடி உண்ண வேண்டும். உடலுக்கு தேவையான புரதம் நிறைந்த உணவுகளில் சோயாவும் ஒன்று. சோயாவில் புரதம் நிறைந்திருக்கிறது. சோயாவில் இருந்து தயாரிக்கப்படும் டோஃபு, சோயா பால், சோயா நகெட் போன்றவற்றை சாப்பிடுவதால் உடல் ஆரோக்கியம் அதிகரிக்கும். 100 கிராம் சோயா நகெட்டில் 52.4 கிராம் புரதம் இருக்கிறது. சோயாவை எப்படி உணவில் சேர்த்து கொள்வதென்று பார்ப்போம்.
Soya Rice Dishes(சோயா ரைஸ்)
பிரியாணி, புலாவ், ஃப்ரைடு ரைஸ் ஆகியவற்றுடன் சோயா சங்க்ஸ் சேர்க்கலாம். இந்த ரெசிபிகளுடன் சேர்த்து சமைக்கும்போது அதன் ருசி அருமையாக இருப்பதோடு அரோக்கியமும் கிடைக்கும்.
Soya Manchurian (சோயா மஞ்சூரியன்)
மஷ்ரூம், காலிஃப்ளவர் போன்றவற்றை கொண்டு மஞ்சூரியன் தயாரிப்பது வழக்கம். மாறாக சோயா கொண்டு மஞ்சூரியன் தயாரித்து பாருங்கள். அதன் ருசி தனித்துவமாக இருக்கும்.
Stir-fried Soya Nuggets(ஸ்டிர்-ஃப்ரைடு சோயா நகெட்ஸ்)
சோயா நகெட்டை ஃப்ரை செய்து சாப்பிட்டால் அருமையாக இருக்கும். தயாரிப்பது மிகவும் எளிமையானது. குழந்தைகள் விரும்பி சாப்பிடுவார்கள்.
Soya Stuffed Sandwiches (சோயா ஸ்டஃப்டு சாண்ட்விச்)
சாண்ட்விச் தயாரிக்கும்போது உங்களுக்கு பிடித்த காய்கறிகளை சேர்த்து கொள்ளலாம். அதேபோல சோயாவை வேக வைத்து, சிறு துண்டுகளாக நறுக்கி, சாண்ட்விச் ஸ்ப்ரெட், குடைமிளகாய், கேரட், வெள்ளரிக்காய் ஆகியவற்றை சேர்த்து சாப்பிட்டால் உடல் ஆரோக்கியத்திற்கு நல்லது.