தேயிலை மர எண்ணெய், தேயிலை தாவரத்திலிருந்து பிரித்தெடுக்கப்படுகிறது. இதிலுள்ள கிருமிக்கு எதிராக செயல்படும் குணம் கூந்தலில் உண்டாகும் பொடுகு, தொற்று, ஆகிய்வற்றை அழித்து கூந்தலை பாதுகாப்பாக வைத்திருக்கும்.
சரும பாதுகாப்புக்கு தேயிலை மர எண்ணெய்
தேங்காய் எண்ணெய் - 2 டீஸ்பூன்
தேயிலை மர எண்ணெய் - 3 துளிகள்
லாவெண்டர் எண்ணெய் - 3 துளிகள்
தேன் - 2 டீஸ்பூன்
மேலே சொன்னவற்றை எல்லாம் நன்றாக கலந்து கொள்ளுங்கள். உங்களுக்கு என்ணெய்பசை இருந்தால், இவற்றோடு சில துளி எலுமிச்சை சாறு கலந்து கொள்ளலாம். முகத்தை ஈரப்படுத்தியபின், இந்த ஃபேஸ் வாஷை கொண்டு முகத்தில் தேய்க்கவும். அரை நிமிடத்திற்கு பிறகு வெதுவெதுப்பான நீரில் கழுவிடுங்கள்.
முகத்தை கழுவிய பின்னர் பார்த்தால் உங்கள் சருமத்தில் இருக்கும் அழுக்குகளை வெளியேறி, மிருதுவான சருமமாக பொலிவுடன் இருக்கும். வாரம் 4 முறை இந்த ஃபேஸ் வாஷ் உபயோகப்படுத்தலாம்.
கூந்தல் வளர்ச்சிக்கு
தேவையானவை : ஏதாவது ஒரு எண்ணெய் - 2 டேபிள் ஸ்பூன் தேயிலை மர எண்ணெய் - 10 துளிகள் டர்க்கி துண்டு - 1
செய்முறை : கூந்தலுக்கு ஊட்டம் தரும் ஏதாவது ஒரு எண்ணெயுடன் தேயிலை மர எண்ணெய் கலந்து லேசாக சூடுபடுத்தி தலையில் அழுந்த தேய்க்கவும். 5 நிமிடம் மசாஜ் செய்து பின்னர் வெதுவெதுப்பான நீரில் டர்க்கி துண்டை நனைத்து பிழிந்து தலையில் கட்டிக் கொள்ளுங்கள். 20 நிமிடம் கழித்து துண்டை கழட்டி தலையை அலசவும். வாரம் ஒருமுறை செய்தால் கூந்தல் நன்றாக அடர்த்தி பெறும். இந்த முறையில் அவரவர் கூந்தலுக்கு தகுந்தாற் போல் எண்ணெய்களை தேர்ந்தெடுங்கள். கீழே சொல்லப்பட்டுள்ள எண்ணெய்களை கூந்தலுக்கு ஏற்ப தேர்ந்தெடுத்து மேலே சொன்னபடி உபயோகியுங்கள்.
வறண்ட சருமத்திற்கு மல்லிகை எண்ணெய்
மல்லிகைப் பூவை அந்த காலத்திலேயே பல்வேறு பிரச்சினைகளுக்கு மருந்தாக பயன்படுத்தி வந்தனர். அதேப்போல, பல்வேறு மருத்துவ குணம் கொண்ட மல்லிகைப் பூ எண்ணெய் மருந்தாக பயன்படுத்தப்பட்டுள்ளது.
இந்த எண்ணெய் பல்வேறு உடல் உபாதைகளுக்கு அருமருந்தாக உள்ளது. அடிபட்டாலோ அல்லது சுளுக்குப் பிடித்து வீக்கம் காணப்பட்டாலும், நாள்பட்ட வீக்கமாக இருந்தாலும், மல்லிகைப் பூவை அரைத்துப் பூசினால் வீக்கம் குறையும். உடலில் இந்த எண்ணெயை மசாஜ் செய்யலாம். உடல்வலி நீங்குவதோடு, குளிர்ச்சி அடையும்.
ரோஜா விதை எண்ணெய்
ரோஜா எண்ணையிலிருந்து தயாரிக்கப்படும் ரோஜா நீர்- ஆசிய, மத்திய கிழக்கு நாடுகளின் சமையல் முறையில் பரவலாக பயன்படுத்தப்படுகிறது.
ரோஜா இதழ்களின் சாறிலிருந்து தயாரிக்கப்படும் ரோஜா பானம் பிரெஞ்சு மக்களிடையே பிரசித்தம். அமெரிக்க ஐக்கிய நாடுகளில், ”ரோஜா ஸ்கோன்” எனப்படும் கேக் தயாரிக்க இந்த பிரென்ச் ரோஜா பானம் பயன்படுத்தப்படுகிறது.
ரோஜாவில் அதிக அளவில் அடங்கியிருக்கும் விட்டமின் C க்காக தேநீர் தயாரிக்க காய்ச்சப்படுகிறது.
மேலும் ரோஜா எண்ணெய், சருமத்தை பாதுகாக்கும். சிறிது பாதாம் எண்ணெய் அல்லது ஆலிவ் எண்ணெயுடன் ரோஜா எண்ணெய், லவெண்டேர் எண்ணெய் போன்றவற்றில் ஏதாவது ஒன்றை நறுமணத்திற்காக சேர்க்கலாம். பின்பு இந்த கலவையை முகத்தில் தடவவும். சூழல் வடிவில் சில நிமிடங்கள் தேய்த்த பிறகு தண்ணீரால் முகத்தை கழுவவும்