/tamil-ie/media/media_files/uploads/2022/01/salt-759.jpg)
Using salt for household hacks in tamil
உப்பில்லா பண்டம் குப்பையிலே என்பது பழமொழி. அந்தளவுக்கு ஒரு உணவில் என்னதான் சுவையூட்டும் பொருட்களை சேர்த்தாலும், அதில் உப்பு சேர்க்கவில்லை என்றால் அந்த உணவு முழுமையடையாது. ஆனால் உப்பை சுத்தம் செய்வதற்கும், பல்வேறு வீட்டு உபயோகங்களுக்கும் பயன்படுத்தலாம் என்பது உங்களுக்கு தெரியுமா?
பல சமையலறைப் பொருட்களின் வாசனையை நீக்கும் இயற்கை வழிகளில் இதுவும் ஒன்றாகும்.
சோடியம் குளோரைடு என்று அறியப்படும் உப்பு, ஒரு பயனுள்ள சுத்தம் செய்யும் முகவராக செயல்படுகிறது. இது துணிகளில் இருந்து எண்ணெய் கறைகளை அகற்ற உதவுகிறது. இப்போது உப்பைப் பயன்படுத்தி, உங்கள் வீட்டு வேலைகளில் சிலவற்றை எளிதாக்கும் 5 எளிய ஹேக்குகளை நாங்கள் உங்களுக்குக் கூறுகிறோம்.
உப்பைப் பயன்படுத்தும் ஹேக்குகள் இங்கே:
* ஒரு பாத்திரத்தில் தண்ணீர் எடுத்து, அதில் இரண்டு தேக்கரண்டி உப்பு போடவும். பிரஷ்ஷை உப்பு நீரில் ஒரு மணி நேரம் ஊற வைக்கவும். இப்போது எடுத்து பாருங்கள். உங்கள் பிரஷ் புதிது போலவே இருக்கும்.
* டிஷ் ஸ்பான்ஞ்-ஐ புத்துணர்ச்சியூட்டவும், வாசனையை நீக்கவும் உப்பு நீரில் ஊறவைத்தால் போதும்.
* ஃப்ளவர் வாஸை எடுத்து, அதில் இரண்டு தேக்கரண்டி உப்பு மற்றும் ஒரு தேக்கரண்டி சர்க்கரை சேர்த்து, தண்ணீரை சேர்க்கவும். இப்போது ஃப்ளவர் வாஸில் இருக்கும் பூக்கள் நீண்ட நாட்கள் வாடாமல் புதிது போல இருக்கும்.
* ஆப்பிள் வெட்டிய சிறிது நேரத்திலே பழுப்பு நிறமாகிறதா? ஆப்பிள் துண்டுகளை உப்பு நீரில் போடவும். தோல் கிண்ணத்தின் வெளிப்புறத்தில் இருப்பதை உறுதிப்படுத்திக் கொள்ளுங்கள். சில நிமிடங்கள் ஊறவைக்கவும், இனி ஆப்பிள் நிறம் மாறாமல் ஃபிரெஷாக இருக்கும்!
* மெழுகுவர்த்தியை உப்பு நீரில் சில மணி நேரம் ஊறவைத்து பின்னர் வெயிலில் உலர்த்தவும். இது மெழுகுவர்த்தி சொட்டாமல், நீண்ட நேரம் எரிய உதவும்.
இந்த ஹேக்குகளை வீட்டில் முயற்சி செய்து, உங்கள் வாழ்க்கையை எளிதாக்குங்கள்!
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil “
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.