உணவில் கலப்படம் செய்வது பொதுவான பிரச்சனையாகி விட்டது, இது அன்றாட உணவு பொருட்களை நுகர்வுக்கு தகுதியற்றதாக ஆக்குகிறது. எனவே, கலப்படம் செய்யப்பட்ட உணவு தானியங்களை உட்கொள்வதற்கு முன்பு நீங்கள் கவனமாக இருக்க வேண்டும், ஏனெனில் அவை உங்கள் ஆரோக்கியத்தில் மோசமான தாக்கத்தை ஏற்படுத்தும்.
இத்தகைய தீங்கு விளைவிக்கும் உணவுப் பொருட்களிலிருந்து அனைவரையும் பாதுகாக்க, இந்திய உணவுப் பாதுகாப்பு மற்றும் தர நிர்ணய ஆணையம் (FSSAI) நாம் உட்கொள்ளும் உணவுகளில் கலப்படம் உள்ளதா என்பதைச் சரிபார்க்க பயனுள்ள சோதனைகளை தொடர்ந்து பகிர்ந்து கொள்கிறது.
அந்தவகையில் தற்போது, உணவு தானியங்களில் ஊமத்தை விதைகள் இருப்பதைக் கண்டறியும் சோதனையை FSSAI பகிர்ந்துள்ளது.
ஊமத்தை, நச்சுத்தன்மை வாய்ந்தது மற்றும் உணவு விஷத்திற்கு வழிவகுக்கும்., இது சாப்பிடுவதற்கு தகுதியற்றது. எனவே உணவு தானியங்களிலிருந்து உடனடியாக அகற்றப்பட வேண்டும்.
கலப்படத்தை எவ்வாறு கண்டறிவது?
FSSAI படி, உணவு தானியங்களில் ஊமத்தை கலப்படத்தை சரிபார்க்க ஒரு எளிய சோதனை இங்கே உள்ளது.
Detecting Dhatura Adulteration in Foodgrains#DetectingFoodAdulterants_19#AzadiKaAmritMahotsav@jagograhakjago @mygovindia @MIB_India @PIB_India @MoHFW_INDIA pic.twitter.com/55HEfPbBHH
— FSSAI (@fssaiindia) January 13, 2022
*ஒரு கண்ணாடி தட்டில் உணவு தானியங்களை சிறிதளவு எடுத்துக் கொள்ளவும்.
* ட்வீட்டர் வீடியோவில் காட்டியபடி, ததுரா எனப்படும் தட்டையான விளிம்புகளைக் கொண்ட கருப்பு-பழுப்பு நிற விதைகள் இருக்கிறதா என நெருக்கமாக ஆராயுங்கள்.
*கலப்படமற்ற உணவு தானியங்களில் ஊமத்தை விதைகள் இருக்காது.
*கலப்பட உணவு தானியங்களில் ஊமத்தை விதைகள் இருக்கும்.
உங்கள் உணவு தானியங்களை சோதித்து பார்த்தீர்களா? இல்லையென்றால் உடனே முயற்சி செய்யுங்கள்!
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“