/tamil-ie/media/media_files/uploads/2022/01/salt_759_pixabay.jpg)
Using this simple trick to detect purity of cooking salt
உப்பு இல்லாமல் நம் சமையலறை முழுமையடையாது. அன்றாட சமையலில் உப்பு என்பது ஒரு அடிப்படை பொருள்.
உப்பு முதன்மையாக சோடியம் குளோரைடு கொண்ட ஒரு கனிமம், சரியான அளவில் எடுத்துக் கொள்ளப்படும் உப்பு, பல ஆரோக்கிய நன்மைகளைக் கொண்டிருக்கிறது. சந்தையில் பல்வேறு வகையான உப்பு கிடைக்கிறது. அதில், நாம், உட்கொள்வது சாதரண உப்பு.
சாதாரண உப்பு என்றால் என்ன?
இது அயோடினுடன் செறிவூட்டப்பட்ட உப்பின் சுத்திகரிக்கப்பட்ட பதிப்பு. இது சுத்திகரிக்கப்பட்ட பால் வெள்ளை நிறத்தில் உள்ளது மற்றும் நீங்கள் சேர்க்கும் எதனுடனும் தடையின்றி கலக்கிறது.
ஆனால் சந்தையில் கிடைக்கும் பொதுவான உப்புகளில் பெரும்பாலும் கலப்படம் செய்யப்படலாம் என்பது உங்களுக்குத் தெரியுமா? அப்படியானால், பொதுவான உப்பின் தூய்மையை எப்படி கண்டறிவது என்ற கேள்வி எழுகிறதா? கவலைப்பட வேண்டாம், இதோ உங்களுக்கான டிப்ஸ்!
நீங்கள் உட்கொள்ளும் உப்பின் தூய்மையைக் கண்டறிய இந்திய உணவு பாதுகாப்பு மற்றும் தர நிர்ணய ஆணையம்( FSSAI ) வழங்கும் இரண்டு எளிய உதவிக்குறிப்புகள் இங்கே உள்ளன.
டிப்ஸ் 1
* ஒரு கிளாஸ் தண்ணீரில் ஒரு ஸ்பூன் உப்பு எடுத்து நன்றாக கலக்கவும்.
* உப்பில், சுண்ணாம்பு கலப்படம் செய்யப்பட்டிருந்தால், அது வெண்மை நிறமாக மாறும். கரையாத பிற அசுத்தங்கள் அடியில் படியும்.
டிப்ஸ் 2
* ஒரு உருளைக்கிழங்கை எடுத்து 2 பகுதிகளாக வெட்டவும்.
* வெட்டப்பட்ட மேற்பரப்பில் லேசாக உப்பு பொடியை தூவிவிடுங்கள். ஒரு நிமிடம் காத்திருக்கவும்.
* இப்போது இரண்டு மாதிரிகளிலும், இரண்டு சொட்டு எலுமிச்சை சாறு சேர்க்கவும்.
* உப்பில் கலப்படம் இருந்தால், உருளைக்கிழங்கின் மேற்பரப்பு நீல நிறமாக மாறும்.
என்ன! எளிதான டிப்ஸ் தானே? இனி, ஒவ்வொரு முறையும் பயன்படுத்துவதற்கு முன்பு உங்கள் சமையலறையில் உள்ள உப்பு தூய்மையானது தானா என்பதை சரிபார்க்கவும்.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil “
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.