சுவையான வாழைத் தண்டு செய்வது குறித்து இங்கு பார்ப்போம்.
பாசிப் பருப்பு - 75 கிராம்
வாழைத் தண்டு - 1
பச்சை மிளகாய் - 2
வெங்காயம் - 1தக்காளி - 1
சாம்பார் தூள் - 1 டீஸ்பூன்
மஞ்சள் தூள் - 1/2 டீஸ்பூன்
உப்பு - சுவைக்கேற்ப
இஞ்சி பூண்டு பேஸ்ட் - 1 டீஸ்பூன்
பெருங்காயத் தூள் - சிறிதளவு
தண்ணீர் - தேவையான அளவு
கரம் மசாலா - 1/2 டீஸ்பூன்
கொத்தமல்லி - சிறிதளவு
செய்முறை
முதலில் பாசிப் பருப்பை நீரில் கழுவிவிட்டு, 20 நிமிடம் ஊற வைக்க வேண்டும். பின் அந்த பாசிப்பருப்பை குக்கரில் போட்டு, அத்துடன் நறுக்கிய வாழைத்தண்டு, பச்சை மிளகாய், நறுக்கிய வெங்காயம், தக்காளி, சாம்பார் தூள், மஞ்சள் தூள், சுவைக்கேற்ப உப்பு, இஞ்சி பூண்டு பேஸ்ட், பெருங்காயத் தூள் சேர்த்து, தண்டு மூழ்கும் அளவில் நீரை ஊற்றி, குக்கரை மூடி அடுப்பில் வைக்கவும். 3 விசில் விட்டு இறக்கவும்.
பின்பு மிக்ஸி ஜாரில் தேங்காய் மற்றும் சோம்பு சேர்த்து சிறிது நீரை ஊற்றி நன்கு அரைத்துக் கொள்ள வேண்டும். குக்கரில் உள்ள விசில் போனதும் அதைத் திறந்து அரைத்த தேங்காயை சேர்த்து, அந்த குக்கரை மீண்டும் அடுப்பில் வைத்து, 5 நிமிடம் கொதிக்க விட வேண்டும். பிறகு ஒரு கடாயில் எண்ணெய் ஊற்றி சூடானதும், கடுகு, வரமிளகாயை சேர்த்து தாளித்து, அதை குக்கரில் உள்ள கூட்டுடன் சேர்த்து கிளறி விட்டு மசாலாக்களை சேர்த்து, மீண்டும் 2 நிமிடம் கொதிக்க விடவும். கொத்தமல்லி இலை தூவி இறக்கினால், சுவையான வாழைத் தண்டு கூட்டு தயார்.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“