மதியம் சாப்பிட்டிற்கு எப்போதும் சாம்பார், பருப்பு வகைகளிலேயே சாப்பிடுவோம். புதிதாக வாழைத் தண்டு மோர் கூட்டு எப்படி செய்வது என்று இங்கு பார்ப்போம்.
தேவையான பொருட்கள்
வாழைத் தண்டு – 1
மஞ்சள் தூள் – கால் டீஸ்பூன்
கெட்டியான புளித்த தயிர் – அரை கப்
உப்பு – தேவைக்கேற்ப
அரைக்க
தேங்காய்த் துருவல் – 1 கப்
பச்சை மிளகாய் -2
அரிசிமாவு – அரை டீஸ்பூன்
சீரகம் – அரை டீஸ்பூன்
ஊறவைத்த துவரம் பருப்பு – ஒரு டீஸ்பூன்
தாளிக்க
தேங்காய் எண்ணெய் – 1 டீஸ்பூன்
கடுகு – அரை டீஸ்பூன்
கறிவேப்பிலை – சிறிதளவு
செய்முறை
அரைக்க கொடுத்துள்ள பொருட்களை மிக்ஸியில் போட்டு அரைத்துக் கொள்ளவும். வாழைத் தண்டினை நார் நீக்கி
சுத்தம் செய்து பொடியாக நறுக்கி மோரில் போட்டு அலசி எடுக்கவும். இப்போது பாத்திரத்தில் நறுக்கிய வாழைத் தண்டு, மஞ்சள்தூள் மற்றும் தேவையான நீர் சேர்த்து வேக வைக்கவும். வெந்ததும் அரைத்த மசாலா சேர்த்து கொதிக்க வைத்து தயிர் சேர்த்து இறக்கவும்.
இப்போது அடுப்பில் கடாய் வைத்து தேங்காய் எண்ணெய் ஊற்றி கடுகு, கறிவேப்பிலை தாளித்து தண்டில் சேர்க்கவும். அவ்வளவு தான் வாழைத் தண்டு மோர் கூட்டு ரெடி. சுடு சாப்பாட்டிற்கு வைத்து சாப்பிட சுவையாக இருக்கும்.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“