செப் தாமு செய்வது போல் அசத்தலான வட கறி, நீங்களும் வீட்டில் செய்து பாருங்க.
தேவையான பொருட்கள்
1 கப் கடலை பருப்பு
2 ஸ்பூன் சோம்பு
5 காய்ந்த மிளகாய்
பொறிக்கும் அளவு எண்ணெய்
1 பிரியாணி இலை
1 பட்டை
2 கிராம்பு
2 ஏலக்காய்
2 வெங்காயம்
உப்பு
2 பச்சை மிளகாய்
1 ஸ்பூன் இஞ்சி -பூண்டு விழுது
அரை ஸ்பூன் மஞ்சள் தூள்
1 ஸ்பூன் மல்லித்தூள்
1 ஸ்பூன் கரம் மசாலா
தண்ணீர்
1 தக்காளி
செய்முறை:
தக்காளியை நீரில் போட்டு சிறிது நேரம் அடுப்பில் வைத்து கொதிக்க விட வேண்டும். பின் அதன் தோலை நீக்கிவிட்டு, அதனை மிக்ஸியில் போட்டு அரைத்துக் கொள்ள வேண்டும். கடலைப் பருப்பை 2 மணிநேரம் ஊற வைத்து நன்றாக கழுவி மிக்ஸியில் போட்டு, அத்துடன் வரமிளகாய், சோம்பு மற்றும் உப்பு சேர்த்து சேர்த்து, கொரகொரவென்று அரைத்துக் கொள்ள வேண்டும். அரைத்த மாவை சிறுசிறு வடைகளாக தட்டி, எண்ணெயில் போட்டு பொன்னிறமாக பொரித்து ஆறியதும் துண்டுகளாக பிய்த்து வைக்கவும். ஒரு வாணலியை அடுப்பில் வைத்து, அதில் தாளிப்பதற்கு கொடுத்துள்ள அளவு எண்ணெய் ஊற்றி காய்ந்ததும், பட்டை, கிராம்பு, பிரியாணி இலை, பச்சை மிளகாய் மற்றும் கறிவேப்பிலை சேர்த்து தாளித்த பின் வெங்காயத்தை போட்டு நன்றாக வதக்கவும். வெங்காயம் நன்றாக வதங்கியதும் இஞ்சி பூண்டு பேஸ்ட் சேர்த்து வதக்கவும். அடுத்து அரைத்து வைத்துள்ள தக்காளியை ஊற்றி வதக்கவும். அடுத்து மிளகாய் தூள், மல்லி தூள், மஞ்சள் தூள் சேர்த்து கிளறி, 3/4 கப் தண்ணீர் ஊற்றி, கொதிக்க விட வேண்டும்.நன்றாக கொதிக்கும் போது தேங்காய் பாலை ஊற்றி கொதிக்க விடவும்.திக்கான பதம் வந்தவுடன் உதிர்த்து வைத்துள்ள வடைகளை போட்டு மிதமான தீயில் 5 நிமிடம் நன்கு கொதிக்க விட்டு கொத்தமல்லியைத் தூவி இறக்கவும்.