இட்லி வைத்து, ,மொறு மொறு வடை செய்யுங்க. செம்ம சுவையாக இருக்கும்.
தேவையான பொருட்கள்
8 இட்லி
2 வெங்காயம்
2 ஸ்பூன் மிளகு
8 பச்சை மிளகாய்
2 ஸ்பூன் இஞ்சி
2 கொத்து முருங்கைக் கீரை
1 ஸ்பூன் அரிசி மாவு
பொறிக்கும் அளவு எண்ணெய்
உப்பு
செய்முறை: ஒரு பாத்திரத்தில் இட்லியை உதிர்த்து சேர்க்கவும், வெங்காயம், ,மிளகு, பச்சை மிளகாய், இஞ்சி, முருங்கைக் கீரை, அரிசி மாவு, உப்பு சேர்த்து கிளரவும்.பொறிக்கும் அளவு எண்ணெய்யில் இதை வடை போல் தட்டி போட்டு பொறிக்கவும்.