vadai recipe in tamil medu vadai recipe : பண்டிகை நாட்களில் கடவுள் வழிபாட்டிற்கு முதலில் மெது வடைதான் வைத்து படைப்பார்கள். இது கடவுளுக்கு மட்டுமல்ல பலருக்கும் மொறு மொறுவென ருசிக்க பிடித்த வடை. எனவே வீட்டில் எப்படி செய்வது என்று பார்க்கலாம்.
Advertisment
தேவையான பொருட்கள்:
உளுந்து - 250 கிராம்,
பச்சை மிளகாய் - 4,
Advertisment
Advertisements
கறிவேப்பிலை - சிறிதளவு,
தேங்காய் எண்ணெய் - 250 கிராம்,
உப்பு - தேவைக்கு,
அரிசி மாவு - 3 மேசைக்கரண்டி.
எப்படிச் செய்வது?
உளுந்தை தண்ணீரில் நான்கு மணி நேரம் ஊறவைக்கவும். நன்கு கழுவி சிறிது தண்ணீர் தெளித்து அரைத்துக் கொள்ளவும். இதனுடன் நறுக்கிய பச்சை மிளகாய், கறிவேப்பிலை, உப்பு, அரிசிமாவு சேர்த்து நன்கு கலக்கவும். கடாயில் தேங்காய் எண்ணெய் சேர்த்து சூடானதும், வடையை தட்டி போட்டு பொன்னிறமாக பொரித்து எடுக்கவும்.
“அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற t.me/ietamil இந்த இணைப்பை க்ளிக் செய்யவும்”