Vadai Recipe In Tamil, Ulundu Vadai Home Cooking Tamil Video: தீபாவளிக்கு அத்தனை இனிப்புகளுக்கும் மத்தியில், அனைவர் வீடுகளிலும் இடம் பெறும் முக்கியமான இனிப்பு அல்லாத பலகாரம் வடை! அதிலும் அன்று காலை உணவாக இட்லி- உளுந்த வடை இடம் பெறாத வீடு இல்லை.
Advertisment
உளுந்த வடை அடிக்கடி நம் உணவில் இடம் பெறுகிற பலகாரம் என்றாலும், அதை மெதுவடை என சொல்லத்தக்க வகையில் செய்யும் கலை அனைவருக்கும் வாய்ப்பதில்லை. இங்கு உளுந்து வடை செய்யும் முறையைப் பார்க்கலாம்.
Ulundu Vadai Home Cooking Tamil Video: உளுந்து வடை
Advertisment
Advertisements
உளுந்த வடை செய்யத் தேவையான பொருள்கள்: உளுந்து– 1 கப், வெங்காயம் – 4, பச்சைமிளகாய் – 2, மிளகு, சீரகம் – 1 டீ ஸ்பூன், உப்பு, எண்ணெய் – தேவைக்கு, பெருங்காயத் தூள் – சிறிதளவு, சமையல் சோடா – 1 சிட்டிகை.
உளுந்து வடை செய்முறை: உளுந்தம் பருப்பை1 மணி நேரம் தண்ணீரில் ஊற வைக்க வேண்டும். பிறகு அதை மிக்சி ஜாரில் நன்றாக அரைத்து எடுக்கவும். வெங்காயம், பச்சை மிளகாயை பொடியாக நறுக்கி எடுத்து கொள்ளவும். மிளகை பொடியாக தட்டி எடுத்து கொள்ளவும்.
அரைத்த உளுந்தம் பருப்பு மாவு, பொடியாக நறுக்கிய வெங்காயம், பச்சைமிளகாய், பொடித்த மிளகு, சீரகம், சமையல் சோடா, பெருங்காயத்தூள், உப்பு ஆகியவற்றை சேர்த்து நன்கு கலந்து விடுங்கள். பிறகு சிறு உருண்டைகளாக வடைகளை போல் தட்டி எடுத்துக் கொள்ளவும்.
வாணலியில் எண்ணெயை ஊற்றி காய்ந்ததும், அதில் உருண்டைகளாக உருட்டி வைத்த கலவையை போட்டு பொன்னிறமாக பொரித்தெடுங்கள். இப்போது சுவையான உளுந்த வடை ரெடி. உளுந்த வடைக்கு, தேங்காய் சட்னி செம்ம காம்பினேஷன் என்பதை சொல்லத் தேவையில்லை. இட்லியுடன் இணைத்தும் வடையை சாப்பிட்டு, தீபாவளியைக் கொண்டாடுங்கள்.
"தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற t.me/ietamil"