நாம் சில நாட்களில் மட்டுமே வீட்டில் வடை போடுவோம். நாம் வீட்டில் வடை போடும்போது அது சரியாக வராது. கல்லு போல் மாறிவிடும் அல்லது அதிக எண்ணெய் குடித்துவிடும். இந்நிலையில் அதிக எண்ணெய் குடிக்காமல் மெது வடையை நாம் சுலபமாக செய்ய முடியும். அதற்கு சில வழிமுறைகளை பின்பற்ற வேண்டும்.
இந்த வடை செய்ய முதலில் 1 கப் உளுத்தம் பருப்பை இரண்டு முறை தண்ணீர் ஊற்றி சுத்தம் செய்த பிறகு உளுந்து மூழ்கும் வரை தண்ணீர் ஊற்றி 2 மணி நேரம் ஊற விட வேண்டும். 2 மணி நேரம் கழித்து தண்ணீர் இல்லாமல் உளுந்தை வடித்து எடுத்துகொள்ளுங்கள். உளுந்து ஊறிய தண்ணீரை எடுத்து வைத்துகொள்ளுங்கள்.
அடுத்து தண்ணீர் இல்லாமல் வடித்த உளுந்தை மிக்ஸி ஜாரில் சேர்த்து தண்ணீர் ஊற்றாமல் ஒரு முறை நன்றாக அரைத்து பிறகு உளுந்து ஊற எடுத்து தண்ணீரை கொஞ்சம் கொஞ்சமாக ஊற்றி நல்ல ஒரு கெட்டியான பதத்திற்கு மாவை அரைத்துக் கொள்ளுங்கள். அதில் கடைசியாக ஒரு உருளைக்கிழங்கை வேக வைத்து சின்ன சின்னதாக நறுக்கி அரைத்துக் கொள்ளுங்கள். இதில் உருளைக்கிழங்கை சேர்க்கும்போது வடை எண்ணெய் குடிக்காது. அதே நேரத்தில் அதிக மொறுமொறுப்பு தன்மையுடன் இருக்கும்.
அடுத்து அரைத்த மாவை ஒரு பாத்திரத்தில் சேர்த்து வெங்காயத்தை நறுக்கி சேர்த்துகொள்ளுங்கள். அதேபோல் ஒரு பச்சை மிளகாய், கறிவேப்பிலை கொத்தமல்லி இவைகளை பொடியாக நறுக்கி சேர்ந்த பின்பு, அரை ஸ்பூன் சீரகம், மிளகு, உப்பு சேர்த்து மாவை அடித்து கொள்ளுங்கள்.
மாவை தயார் செய்து வைத்த பிறகு அடுப்பில் எண்ணெய் சூடாக்கி வடை போல தட்டிப் போட வேண்டும்.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“