பிறப்புறுப்பில் அரிப்பு அசௌகரியத்தை ஏற்படுத்துவதுடன், ஒரு அடிப்படை பிரச்சனையையும் குறிக்கலாம். பூஞ்சை தொற்று அல்லது பாக்டீரியா வஜினோசிஸ் போன்றவை பிறப்புறுப்பு அரிப்புக்கான சில பொதுவான காரணங்கள்.
எதுவாக இருந்தாலும், சரியான நேரத்தில், சரியான சிகிச்சையைத் தொடங்க பிறப்புறுப்பு அரிப்புக்கான காரணங்களை அறிந்து கொள்வது முக்கியம்.
மகப்பேறு மருத்துவ நிபுணர் ஸ்ருதி ஷர்மா, யோனி அரிப்பு பல நிலைகளின் அறிகுறியாக இருக்கலாம். அசௌகரியம் தாங்க முடியாததாக இருக்கலாம், ஆனால் யோனி அரிப்பு உண்மையில் மிகவும் பொதுவானது, மேலும் உங்களுக்கு அது ஏற்படுவதற்கு நிறைய காரணங்கள் உள்ளன என்றார்.
டாக்டர் ஷர்மாவின் கூற்றுப்படி, யோனி அல்லது பிறப்புறுப்பு அரிப்புக்கான சில காரணங்கள் இங்கே:
பாக்டீரியா வஜினோசிஸ் (Bacterial vaginosis)
பாக்டீரியல் வஜினோசிஸ் என்பது பாக்டீரியல் வளர்ச்சி மற்றும் யோனியில் pH ஏற்றத்தாழ்வு காரணமாக ஏற்படும் மிகவும் பொதுவான நிலை, இது பெண்களுக்கு அரிப்புக்கு வழிவகுக்கும்.
மகப்பேறியல் மற்றும் பெண்ணோயியல் ஆலோசகர் டாக்டர் கிஞ்சல் ஷா கருத்துப்படி, இது பொதுவாக பாதுகாப்பற்ற உடலுறவு கொண்ட பெண்களை அல்லது douching கொண்டு அடிக்கடி பிறப்புறுக்குள் சுத்தம் செய்யும் பெண்களை பாதிக்கிறது.
தொடர்பு தோல் அழற்சி (Contact dermatitis)
சோப்புகள், டிடர்ஜெண்ட், பபிள் பாத், புதிய வகை உள்ளாடைகள் – இப்படி உங்கள் பிறப்புறுப்புடன் தொடர்பு கொள்ளும் எந்தவொரு புதிய தயாரிப்பும் அரிப்புகளை ஏற்படுத்தும். யோனி சுற்றியுள்ள தோலின் மென்மையான மடிப்புகளில் வால்வார் டெர்மடிடிஸ் ஏற்படுகிறது. இதனால் அங்கு சிவத்தல், வலி மற்றும் அரிப்பு வருகிறது.
பூஞ்சை தொற்று
பாலாடைக்கட்டி போன்ற வெளியேற்றம், லேபியா மற்றும் வுல்வாவைச் சுற்றி சிவத்தல் மற்றும் அரிப்பு ஆகியவை பூஞ்சை தொற்றுக்கான உன்னதமான அறிகுறிகளாகும். இது கேண்டிடா வல்வோவஜினிடிஸ் (Candida vulvovaginitis) என்ற பூஞ்சை தொற்று நோயால் ஏற்படுகிறது.
பாலியல் ரீதியாக பரவும் தொற்று (STI)
அரிப்பு உண்மையில் பெரும்பாலான பாலியல் ரீதியாக பரவும் தொற்றுகளின் ஒரு அறிகுறி அல்ல, இருப்பினும் இது சில சமயங்களில் ஏதோ இருக்கிறது என்பதற்கான முதல் அறிகுறியாக இருக்கலாம்.
டாக்டர் ஷாவின் கூற்றுப்படி, genital herpes, trichomoniasis, gonorrhea, chlamydia, and human papillomavirus infection ஆகியவை சருமத்தை எரிச்சலூட்டும் மற்றும் அரிப்புகளை ஏற்படுத்தும் சில பாலியல் ரீதியாக பரவும் தொற்றுகள்.
பொதுவாக பிறப்புறுப்பு பகுதியில் உள்ள பேன்கள் (Public lice) என்பது எளிதில் பரவும், இது உங்களை பைத்தியம் போல் அரிக்கும்.
மெனாபாஸ்
ஒரு பெண்ணின் இனப்பெருக்க ஆண்டுகளின் முடிவில் ஈஸ்ட்ரோஜன் உற்பத்தி குறைவதால் யோனி சுவர்கள் மெலிந்து வறண்டு, நமைச்சலை ஏற்படுத்தும். இது அட்ரோபிக் வஜினிடிஸ் (vaginal atrophy) காரணமாக, ஈஸ்ட்ரோஜன் அளவு குறைவதால் யோனியின் புறணி உலர்ந்ததாகவும் மெல்லியதாகவும் மாறும் என்று டாக்டர் ஷா குறிப்பிட்டார்.
பிறுப்புறுப்பு அரிப்புக்கான சிகிச்சை

*யோனி பூஞ்சை தொற்று, ஆன்டி ஃபங்கல் மருந்துகளால் சிகிச்சையளிக்கப்படுகிறது. இவை கிரீம், களிம்பு அல்லது மாத்திரைகள் உட்பட பல்வேறு வடிவங்களில் வருகின்றன.
*பாக்டீரியல் வஜினோசிஸ் பொதுவாக ஆன்டிபயாடிக் மருந்துகளால் சிகிச்சையளிக்கப்படுகிறது.
*பாலியல் ரீதியாக பரவும் தொற்று ஆன்டி பயாடிக், ஆன்டிவைரஸ் மருந்துகள் அல்லது ஆன்டி-பராசிடிக்ஸ் மூலம் சிகிச்சையளிக்க முடியும்.
வீட்டு வைத்தியம்
டாக்டர் ரிது சேதியின் கூற்றுப்படி, பிறப்புறுப்பில் அரிப்பு ஏற்படுவதைத் தடுக்கவும், நல்ல பிறப்புறுப்பு ஆரோக்கியத்தைப் பராமரிக்கவும், நீங்கள் செய்யக்கூடிய சில விஷயங்கள் இங்கே உள்ளன.
* வெதுவெதுப்பான நீர் மற்றும் மென்மையான க்ளென்சரைப் பயன்படுத்தி, உங்கள் பிறப்புறுப்புப் பகுதியைக் கழுவவும்.
* வாசனை சோப்புகள், லோஷன்கள் மற்றும் பபிள் பாத் ஆகியவற்றைத் தவிர்க்கவும்
* நீச்சல் அல்லது உடற்பயிற்சி செய்த உடனேயே ஈரமான ஆடைகளை மாற்றவும்
* பருத்தி உள்ளாடைகளை அணியுங்கள்
* பாக்டீரியாவைத் தடுக்க எப்போதும், பிறப்புறுப்பையும், ஆசனவாயையும் கழுவவும்.
* உடலுறவு கொள்ளும்போது தடுப்பு முறைகளைப் பயன்படுத்தவும்
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“