உடலுறவின் போது பெண்களுக்கு வரும் வஜைனிஸ்மஸ் பிரச்னை.. சித்த மருத்துவர் சொல்லும் காரணங்கள்

வஜைனிஸ்மஸ்'-க்கு 80 சதவிகிதம் மனம் சார்ந்த பிரச்னைகள்தான் காரணம். உடல்சார்ந்த காரணங்கள் 20 சதவிகிதம் தான். இதற்கு மருந்து தேவைப்படாத அளவுக்குச் சிகிச்சைகள் இருக்கின்றன.

வஜைனிஸ்மஸ்'-க்கு 80 சதவிகிதம் மனம் சார்ந்த பிரச்னைகள்தான் காரணம். உடல்சார்ந்த காரணங்கள் 20 சதவிகிதம் தான். இதற்கு மருந்து தேவைப்படாத அளவுக்குச் சிகிச்சைகள் இருக்கின்றன.

author-image
WebDesk
புதுப்பிக்கப்பட்டது
New Update
lifestyle

Vaginismus symptoms, causes and treatment siddha doctor explains

வஜைனிஸ்மஸ் என்பது பெண்களுக்கு வருகிற ஒரு மனம்சார்ந்த உடல் பிரச்னை. இதற்கு மூன்று காரணங்கள் இருக்கின்றன. ஒன்று, சம்பந்தப்பட்ட பெண், அளவுக்கு அதிகமான கவலைப்படுகிற இயல்பு கொண்டவராக இருக்கலாம்.

Advertisment

இந்தக் கவலையானது, உறவின்போது அந்தப் பகுதி தசையை இறுக்கமாக்கிவிடும். ஒரு புது அனுபவமாக தாம்பத்ய உறவு நிகழ ஆரம்பிக்கும்போது நம்மால் இதைச் சரிவர செய்ய முடியுமா என்று பயப்படுவது அல்லது புது நபருடன் தன்னை முழுமையாகப் பகிர்ந்துகொள்ள வேண்டும் என்கிற நிலைமை வரும்போது வருகிற அளவுக்கு அதிகமான பயம் ஆகியவை வஜைனிஸ்மஸ் பிரச்னையை ஏற்படுத்திவிடும்.

இரண்டாவது காரணம், சம்பந்தப்பட்ட பெண்ணுக்கு அவருடைய சிறுவயதில் ஏதாவது பாலியல் தொல்லை நடந்திருந்தாலும், அந்த ஞாபகங்களின் காரணமாக தாம்பத்திய உறவின்போது பயமும் தயக்கமும் ஏற்படும். இதன் காரணமாகவும், அந்தப் பகுதி தசைகளில் இறுக்கம் ஏற்படும்.

மூன்றாவதாக விருப்பமில்லாத திருமணம் நடந்தாலும், இந்த நிலை நிகழலாம். இது அந்தப் பெண்ணுக்குத் தெரிந்தே நிகழும். அந்தளவுக்கு, பெண்களின் மனதுக்குச் சக்தி இருக்கிறது.

Advertisment
Advertisements

வஜைனிஸ்மஸ்'-க்கு 80 சதவிகிதம் மனம் சார்ந்த பிரச்னைகள்தான் காரணம். உடல்சார்ந்த காரணங்கள் 20 சதவிகிதம் தான். இதற்கு மருந்து தேவைப்படாத அளவுக்குச் சிகிச்சைகள் இருக்கின்றன. மனம் ரிலாக்ஸானால் உடலும் ரிலாக்ஸாகும். இதற்கு உளவியல் ஆலோசனை தேவைப்படும். இதன்மூலம், உடலின் வயிற்றுப்பகுதியை ரிலாக்ஸாக்க முடியும்.

பெண்களுக்கு வஜைனிஸ்மஸ் என்று சொல்லப்படுகிற பிரச்னை ஆண்களுக்கு வேறுவிதமாக நடக்கும். விறைப்புத்தன்மை குறைவாகவோ, விறைப்புத்தன்மை இல்லாமலோ இருக்கும். சிலருக்கு உறவுக்கு முன்னதாக விந்து வெளியேறிவிடும். இதை கவுன்சலிங் மூலம் சரி செய்யலாம்.

ஒருவேளை பிரச்னைக்கு காரணம் ஹார்மோன் குறைபாடு என்றால் மருந்துகளின் மூலம் சரிசெய்துவிடலாம். இதுவே பெண்ணின் வஜைனிஸ்மஸ் பிரச்னைக்கு உளவியல் ஆலோசனை  தேவைப்படும்.

தகவல் உதவி: மருத்துவர் முத்துக்குமார், சித்த மருத்துவ சிறப்பு நிபுணர் மற்றும் ஆராய்ச்சியாளர், வாட்ஸ் அப் தொடர்பு எண் 9344186480

“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil

Lifestyle

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us: