வைகாசி பௌர்ணமி நாளை மறுநாள் (மே 23) வருகிறது. வைகாசி பௌர்ணமி தினத்தில் அம்மனை வழிபடுவது சிறப்பாகும். முழு நிலவான அந்நாளில் வழிபாடு செய்யும் முறை குறித்து பார்ப்போம். பெண்கள் இந்த வழிபாட்டை செய்யலாம். தடைகள் விலகிச் செல்லும். வைகாசி நாளில் வரும் ஒவ்வொரு நாளும் விஷேசமான நாள் தான். வைகாசி பௌர்ணமி நாளில் வழிபடும் முறைகளை பார்ப்போம். வி.ஜே ஆர்த்தி என்ற யூடியூப் பக்கத்தில் இந்த முறைகள் கூறப்பட்டுள்ளன.
முதலில் காலை எழுந்து குளித்து அம்மன் ஆலயம் செல்ல வேண்டும். ஆலயம் சென்று வழிபடுங்கள். முடிந்தால் பால் வாங்கி கொடுத்து வழிபடுவது நல்லது. பால் அபிஷேகத்திற்கு பால் வாங்கி கொடுக்கலாம். குடும்பதில் உள்ளவர்கள் பெயரில் அர்ச்சனை செய்து வழிபடுங்கள். பௌர்ணமி தினத்தில் காலையில் அம்மன் தரிசனம் மிகவும் அவசியம்.
வீட்டில் செய்ய வேண்டிய மிகவும் முக்கியமான ஒன்று விளக்கு பூஜை. வீட்டில் உள்ள குத்துவிளக்கை எடுத்து அதை சுத்தம் செய்து அலங்கரித்து, அம்பாளை போன்று அலங்கரித்து அம்பாளுக்கு தேவையான நெய் வேதியம், பழங்கள் வைத்து அலங்கரிக்கவும். பின் அதை வீட்டில் அம்மன் முன்வைத்து விளக்கு ஏற்றி வழிபடவும். அப்போது அம்மன் போற்றிகளை படிக்கலாம். குங்குமம் போற்றிகளையும் செய்து வழிபடலாம். வீட்டில் உள்ள அனைத்து பெண்மணிகளும் இதை செய்யலாம்.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“