/indian-express-tamil/media/media_files/2025/06/09/ENN1Xr6wg5ZHXyHR8oRO.jpg)
முருகப் பெருமான் அவதரித்த திருநாளாக வைகாசி விசாகத் திருநாள் கொண்டாடப்படுகிறது. இந்த வைகாசி விசாகத் திருநாள் என்பது ஒவ்வொரு ஆண்டும் தமிழ் மாதமான வைகாசி மாதத்தில் விசாக நட்சத்திரம் கூடுகிற நாளில் கொண்டாடப்படுகிறது.
இந்த ஆண்டு வைகாசி விசாகம் திருநாளில் எப்படி விருதம் இருக்க வேண்டும், வழிபாடு எப்படி செய்ய வேண்டும், என்ன மந்திரம் சொல்ல வேண்டும் என்பன உள்ளிட்டவற்றை பிரபல நாட்டுப்புற பாடகி அனிதா குப்புசாமி கூறியுள்ளார்.
முருகப் பெருமான் அவதரித்த திருநாளாக வைகாசி விசாகத் திருநாள் கொண்டாடப்படுகிறது. இந்த வைகாசி விசாகத் திருநாள் என்பது ஒவ்வொரு ஆண்டும் தமிழ் மாதமான வைகாசி மாதத்தில் விசாக நட்சத்திரம் கூடுகிற நாளில் கொண்டாடப்படுகிறது.
வைகாசி விசாக நாள் முருகப்பெருமானுக்கு உரிய நாள், என்பதால் அந்த நாளில் பக்தர்கள், முருகப் பெருமானுக்கு பால் அபிஷேகம், பன்னீர் அபிஷேகம், பஞ்சாமிர்த அபிஷேகம் உள்ளிட்ட அபிஷேகங்கள் செய்வார்கள். முருகப்பெருமானுக்கு காவடிகள் எடுப்பார்கள்.
வைகாசி விசாகத் திருநாளில் பக்தர்கள், குழந்தை வரம், திருமண வரம், வீட்டில் செல்வம், சந்தோஷம் வேண்டி விரதம் இருந்து முருகப்பெருமானை வழிபடாலாம்.
முருகப் பெருமானுக்கு உகந்த வைகாசி விசாக நட்சத்திரம் திருநாள் இந்த 2025-ம் ஆண்டில் ஜூன் 9-ம் தேதி 2.08 பிற்பகல் தொடங்கி ஜூன் 10-ம் தேதி மாலை 4.40 வரை உள்ளது. அதனால், பக்தர்கள் வைகாசி விசாகத் திருநாளை ஜூன் 9-ம் தேதி அன்று வழிபாடு செய்ய வேண்டும்.
வைகாசி விசாகத் திருநாளில் முருகப் பெருமானுக்கு விரதம் இருந்து வழிபடுவது நல்லது. முருகப் பெருமானுக்கு சமைத்து நைவேத்தியம் படைக்கலாம். அப்படி முருகப் பெருமானுக்கு படைப்பவர்கள் எப்படி சமைக்க வேண்டும் என்றால், உப்பு இல்லாமல், காரம் இல்லாமல் சமைத்து படைக்க வேண்டும், அதையே விரதம் இருப்பவர்களும் சாப்பிட வேண்டும் என்று அனிதா குப்புசாமி கூறுகிறார்.
வைகாசி விசாகத் திருநாளில் விரதம் இருந்து வழிபடுபவர்கள், மௌன விரதம் இருப்பதும் நல்லது என்கிறார். மேலும், முருகப்பெருமானை வழிபடும்போது, ஓம் சரவண பவ என்ற மந்திரத்தையும் கந்த சஷ்டி கவசத்தையும் சொல்லி வழிபடலாம் என அனிதா குப்புசாமி கூறுகிறார்.
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.