வைகுண்ட ஏகாதசியை முன்னிட்டு திருப்பதியில் தரிசனம் செய்யும் பக்தர்களின் வசதிக்காக சிறப்பு டிக்கெட் கவுண்டர்கள் அமைக்கப்பட்டுள்ளன. திருமலை திருப்பதி தேவஸ்தானத்தின் வைகுண்ட ஏகாதசி 2025 சிறப்பு தரிசன நுழைவுக்கான ஆன்லைன் டிக்கெட் முன்பதிவு திறக்கப்பட்டுள்ளது.
திருப்பதி ஏழுமலையான் கோயிலில் நாள்தோறும் திரளான பக்தர்கள் சாமி தரிசனம் செய்து வருகின்றனர். இலவச தரிசனம், கட்டண தரிசனம் என்று இரு முறைகளில் பக்தர்கள் தரிசனம் செய்து வருகின்றனர்.
பண்டிகை மற்றும் விசேஷ நாட்களில் இலவச தரிசனத்தில் பக்தர்கள் மணிக்கணக்கில் வரிசையில் காத்திருந்து பக்தர்கள் தரிசனம் செய்கின்றனர். இந்நிலையில் வைகுண்ட ஏகாதசியை முன்னிட்டும் ஏராளமானோர் தரிசனம் செய்ய குவிந்துள்ளனர்.
வைகுண்ட ஏகாதசி என்பது இந்துக்கள் மத்தியில் மிக முக்கியமான விழாக்களில் ஒன்றாகும். இந்நிலையில், வைகுண்ட ஏகாதசியை முன்னிட்டு திருப்பதியில் பக்தர்கள் தரிசனம் செய்யும் வகையில் சிறப்பு டிக்கெட் கவுண்டர்கள் அமைக்கப்பட்டுள்ளன.
திருமலை திருப்பதி தேவஸ்தானத்தின் வைகுண்ட ஏகாதசி 2025 சிறப்பு தரிசன நுழைவுக்கான ஆன்லைன் டிக்கெட் முன்பதிவு திறக்கப்பட்டுள்ளது.
மிகவும் எதிர்பார்க்கப்பட்ட வைகுண்ட ஏகாதசி 2025ம் ஆண்டுக்கான சிறப்பு நுழைவு தரிசன டிக்கெட்டுகளுக்கான ஆன்லைன் டிக்கெட் முன்பதிவை தேவஸ்தானம் திறந்துள்ளது. டிக்கெட்டுகளை திருப்பதி தேவஸ்தானத்தின் வலைத்தளத்தில் பதிவு செய்ய ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. வரும் ஜனவரி 10 முதல் 19ஆம் தேதி வரை வைகுண்ட ஏகாதசி திருவிழா நடைபெற உள்ளது. இதில் லட்ச கணக்கான பக்தர்கள் கலந்து கொள்வார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“