திருமலையில் ஆண்டுதோறும் வைகுண்ட ஏகாதசியை முன்னிட்டு வைகுந்த வாயில் திறக்கப்பட்டு பக்தர்கள் அவ்வழியாகச் செல்ல அனுமதிக்கப்படுவர்.
அதன்படி நிகழாண்டு வைகுண்ட ஏகாதசியை முன்னிட்டு, திருப்பதி ஏழுமலையான் கோயிலில் டிசம்பர் மாதம் 23ம் தேதி முதல் 2024 ஆம் ஆண்டு ஜனவரி மாதம் 1ஆம் தேதி வரை பக்தர்களுக்கு சொர்க்க வாசல் தரிசனம் ஏற்பாடு செய்யப்படுகிறது.
இதற்காக ரூ.300 சிறப்பு தரிசன டிக்கெட்கள், வரும் 10 ம் தேதி ஆன்லைனில் வெளியிடப்படும் என்று திருப்பதி தேவஸ்தானம் அறிவித்துள்ளது. நாள் ஒன்றுக்கு 22 ,500 என்ற எண்ணிக்கையில் பத்து நாட்களுக்கும் சேர்த்து 2,25,300 ரூபாய் டிக்கெட் வெளியிடப்படும்.
இலவச தரிசனம் மூலம் நாள் ஒன்றுக்கு 50 ஆயிரம் பக்தர்களும் வைகுண்ட வாசல் பிரவேசம் செய்யலாம்..
இலவச தரிசன டோக்கன் வழங்குவதற்காக திருப்பதியில் தற்போது செயல்படும் கவுண்டர்களுடன் கூடுதலாக கவுண்டர்கள் அமைக்கப்படும். அவற்றின் மூலம் நாள் ஒன்றுக்கு 42,500 என்ற எண்ணிக்கையில் 10 நாட்களுக்கும் சேர்த்து 4,25,000 இலவச தரிசன டோக்கன்கள் வழங்கப்படும், என்று தேவஸ்தானம் அறிவித்துள்ளது.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“