sorgavasal, ekadashi 2020 dates,ஏகாதசி 2020, ekadasi vratham in tamil 2020 ,ஏகாதசி சொர்க்கவாசல், vaikunta ekadasi sorgavasal thirappu
மார்கழி மாதம் என்றாலே காலையில் சீக்கிரம் எழுந்து குளித்து ஆண்டாள் பாசுரங்களை படிப்பது பலரின் வழக்கம். இந்த சமயத்தில் ஓசோன் பூமிக்கு அருகில் இருப்பதால், அது உடல் நலத்துக்கு உகந்தது எனவும் பலர் சீக்கிரம் எழுந்து நடைப்பயிற்சிகளை மேற்கொள்வார்கள். இது தவிர, இந்த மாதத்தில் கடைபிடிக்கப்படும் ஏகாதசி விரதமும் மிகவும் பிரசித்தி பெற்றது.
Advertisment
உள்ளாட்சி தேர்தலில் வெற்றி பெற்ற சில சுவாரசியமான வேட்பாளர்கள்!<>/strong
மார்கழி மாதத்தில் வரும் வளர்பிறை பதினோராம் நாள் வைகுண்ட ஏகாதசியாக கொண்டாடப்படுகிறது. வைகுண்ட ஏகாதசியன்று திருமால் வைகுண்டத்திலிருந்து அருள்பாலிப்பதாக நம்பப்படுவதால் இந்த விழா சிறப்பாக கருதப்படுகிறது. விரதமிருந்து இரவு முழுவதும் கண் விழித்திருப்பதையும், அதிகாலையில் இறைவனை தரிசிப்பதையும் மக்கள் முக்கியமானதாகக் கருதுகிறார்கள் .
Advertisment
Advertisements
வைகுண்ட ஏகாதசியன்று மட்டும் காலை அதிகாலை 3.00 மணிக்கு முதல் 3.00 மணிக்குள் வரை உஷபூசை நடைபெற்றுவிடுகிறது. சரியாக 4.45 மணிக்குள் கருவறையின் வடக்கே உட்பிராகரத்தில் காணப்படும் ' ஸ்ரீ பரமபதத்தில்' சொர்க்க வாசல் நடை திறக்கபடுகிறது.
ஏகாதசி நாளன்று இரத்தினங்களால் வேய்ந்த ரத்னாங்கி என அழைக்கப்படும் உடையில் கருவறையிலிருந்து வெளிவந்து ஆயிரங்கால் மண்டபத்தில் வீற்றிருக்க வடக்கு வாயில் ("பரமபத வாசல்", சொர்க்க வாசல்" என்றும் அழைக்கப்படுகிறது) வழியே உலா வருவதைக் காண பெருந்திரளான பக்தர் கூட்டம் கூடும். இந்த வாயில் இந்த நாளிலே மட்டுமே திறக்கப்படும் என்பதும் கூறப்படுகிறது.